கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து 20 பெண்களிடம் அத்துமீறிய மாணவன்.. மோகன் ஜி போட்ட பரபரப்பு பதிவு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து காதலிப்பதாக கூறி ஏமாற்றி 20 மாணவிகளிடம் அத்துமீறிய குற்றச்சாட்டில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் மோகன் ஜி, எத்தனை முறை காவல்துறை சொன்னாலும், திரைப்படங்களில் சொன்னாலும், செய்திதாளில் செய்தி வந்தாலும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாத்தியார்விளையை சேர்ந்த 22 வயதாகும் ஸ்ரீ தர்சன் (22), கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்ஏ படித்து வருகிறார். கோவை பி.கே. புதூர் பகுதியில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி அங்கிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். மாணவர் ஸ்ரீதர்சன் தன்னோடு படித்து வந்த 19 வயது மாணவியிடம் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். அத்துடன் காதல் ஆசை வார்த்தை காட்டி மாணவியை தான் தங்கியிருந்த வீட்டிற்கு அடிக்கடி அழைத்து சென்று அத்துமீறி வந்துள்ளாராம்.

Coimbatore Director Mohan G student

இதேபோல் ஸ்ரீதர்சன் இன்னொரு கல்லூரி மாணவியுடன் நெருங்கி பழகியதாகவும், அவரையும் தான் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து சென்று அத்துமீறி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த 2 மாணவிகளையும் ஒதுக்கிவிட்டு இன்னொரு மாணவியை இப்போது காதலிப்பதாக கூறப்படுகிறது. அந்த மாணவியையும் ஆசைக்கு இணங்குமாறு கூறினாராம். ஆனால் அந்த மாணவி மறுத்ததுடன், அவரை பற்றி அறிந்து ஒதுங்கி உள்ளார். ஆனால் ஸ்ரீ தர்சன் மிரட்டியதுடன், போட்டோ, வீடியோக்களை பரப்புவேன் என்று மிரட்டினாராம்

இதனால் மாணவிகளிடம் ஸ்ரீ தர்சன் அத்துமீறிய விவகாரம் வேகமாக பரவியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 2 மாணவிகள் கோவை குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் பிஎன்எஸ் சட்ட பிரிவு 75, 79, 296 பி, 351 (2) (பாலியல் துன்புறுத்தல், தகாத முறையில் பேசுதல், மிரட்டுதல், வன்முறை செய்யும் வகையில் எச்சரித்தல்) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்ட பிரிவின்படி வழக்குப்பதிந்து, ஸ்ரீ தர்சனை கடந்த ஜூலை 22ம் தேதி கைது செய்தனர்.

ஸ்ரீ தர்சன் தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது ஆணுறைகள் இருந்துள்து. இவர் காதலிப்பதாக நடித்து பல மாணவிகளை வீட்டிற்கு வரவழைத்து அத்துமீறியது விசாரணையில் தெரியவந்ததாம். 20க்கும் மேற்பட்ட மாணவிகளை இப்படி பழகி ஏமாற்றியிருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

போலீசார் ஸ்ரீ தர்சனின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் ஏராளமான அந்தரங்க படங்கள் , வீடியோக்கள் இருந்துள்ளது. ஸ்ரீதர்சனின் காதல் வலையில் விழுந்த சில மாணவிகள் வெளியே சொல்லாமல் மறைத்து விட்ட நிலையில், தற்போது துணிந்து சில மாணவிகள் அளித்த புகாரால் விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது . கல்லூரி மாணவிகள் காதல் போர்வையில் ஏமாற்றும் நபர்களிடம் மிகுந்த உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Coimbatore Director Mohan G student

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் மோகன் ஜி, எத்தனை முறை காவல்துறை சொன்னாலும், திரைப்படங்களில் சொன்னாலும், செய்திதாளில் செய்தி வந்தாலும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள நெட்டிசன்கள், மோகன்ஜிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், இவர்கள் படிக்கப் போகிறார்களா அல்லது வேறு எதுக்கு போகிறார்கள்.. தயவுசெய்து எந்த ஒரு தவறான பழக்கத்திலும் இளைய சமுதாயம் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.. அனைவருக்கும் ஒரு நாள் இதெல்லாம் நடக்கும் ஆனால் அதெல்லாம் திருமணத்திற்குப் பிறகுதான் என்று கூறியுள்ளார்.

இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், நாடக காதலே இல்லை இதுல எங்களை வேற சொல்லிடுறாங்கன்னு ஒரு குரூப் கதறுறாங்க... இதுதான் நாடக காதல்னு தெரிஞ்சு அப்டின்னா என்னான்றாங்க... இந்த சமூக சீரழிவாளர்களிடமிருந்து பெற்றோர்களும் பெண்களும் கவனமாக இருக்க வேண்டும் நீங்கள் திரௌபதி 2 3 ன்னு எடுத்து சமூக சீர்திருத்தம் செய்யுங்கள் என்று மோகன்ஜிக்கு பதில் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+