"ஆபரேஷன் கொங்கு".. நேரடியாக களமிறங்கிய உதயநிதி.. பெரிய டீம் ரெடி.. சீனியர்களும் இறங்கிட்டாங்களே! அட

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் விதமாக திமுக பல்வேறு குழுக்களை நியமித்து உள்ளது. அதில் மேற்கு மண்டலத்தின் பொறுப்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.அதேபோல் பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர். பூத் கமிட்டி சார்பாக வாக்காளர்களை சந்திக்கும் பணிகளை திமுக தொடங்கவிட்டது.

DMK announces various teams for Lok Sabha 2024 election: Udhayanidhi Stalin to take care of Kongu

சர்வேக்கள்: இந்த நிலையில்தான் கோவை, சென்னை, சேலம், திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் திமுக சார்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் முக்கியமான சர்வே ஒன்றை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். இந்த சர்வேபடி நேரடியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று சர்வே எடுப்பார்கள்.

அவர்களின் பூர்வீகம், வீடு, நிதி விவரங்களை கேட்பார்கள். இதில் ஜாதி தொடர்பான விவரங்களையும் சேகரிக்க உள்ளனராம். ஜாதி எண்ணிக்கையில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கணக்கெடுப்பை திமுக எடுக்கிறதாம். தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதை வரை பல விஷயங்களில் கவனம் செலுத்தும் விதமாக திமுக இந்த கணக்கெடுப்பை கையில் எடுக்கிறதாம்.

குழு நியமனம்: இப்படிப்பட்ட சர்வேக்களுக்கு இடையில் 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் விதமாக திமுக பல்வேறு குழுக்களை நியமித்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய குழு அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய உள்ள குழுவில் குழு தலைவராக டி.ஆர்.பாலு (கழகப் பொருளாளர்) நியமிக்கப்பட்டு உள்ளார்.

DMK announces various teams for Lok Sabha 2024 election: Udhayanidhi Stalin to take care of Kongu

குழு உறுப்பினர்கள் : கே.என்.நேரு (கழக முதன்மைச் செயலாளர்), இ.பெரியசாமி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), க.பொன்முடி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), ஆ.ராசா எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) , எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இரண்டாவது குழு: நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழுவில் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல் மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைவராக . கனிமொழி கருணாநிதி எம்.பி., (கழகத் துணைப் பொதுச் செயலாளர்) நியமிக்கப்பட்டு உள்ளார்.

மூன்றாவது குழு: டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்புத் தலைவர்), ஏ.கே.எஸ்.விஜயன் (கழக விவசாய அணிச் செயலாளர்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர்), டி.ஆர்.பி.இராஜா (கழகத் தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர்), கோவி.செழியன் (கழக வர்த்தகர் அணி துணைத் தலைவர்), கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., (கழக மாணவரணிச் செயலாளர்), எம்.எம்.அப்துல்லா எம்.பி., (கழக அயலக அணிச் செயலாளர்), மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., (கழக மருத்துவ அணிச் செயலாளர்), மேயர் பிரியா ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்: இதுதான் மேற்கு மண்டலத்தின் பொறுப்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது. திமுகவின் மேற்கு மண்டல பிரதிநிதியாக களமிறங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஒருங்கிணைப்பு குழுவில் மண்டலத்துக்கு ஒருவர் என அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள்தான் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க உள்ளனர். டெல்டா மண்டலத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மண்டலத்துக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி என குழு களமிறங்க உள்ளனர்.

செந்தில் பாலாஜி ஆப்சென்ட்; கொங்கில் திமுகவின் முகமாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் வருகை திமுகவிற்கு வலு சேர்க்கும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தினர்.

DMK announces various teams for Lok Sabha 2024 election: Udhayanidhi Stalin to take care of Kongu

செந்தில் பாலாஜி இல்லாத காரணத்தால் கொங்கு மண்டல திமுகவினர் அப்செட் ஆகி உள்ளனர். அவர்கள் பெரிய ஆர்வம் இன்றி உள்ளனர். அவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் விதமாக உதயநிதி இங்கே களமிறங்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தலுக்கான பணிகளை கடந்த சில நாட்களாகவே திமுக தீவிரமாக செய்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 38 இடங்களில் வென்றது. புதுச்சேரியில் 1 இடத்தில் வென்றது. இதே வெற்றியை இந்த முறை தமிழ்நாட்டில் பதிவு செய்வதற்கான தீவிரமான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது,.

40க்கு 40 இடங்களில் வெல்ல வேண்டும் என்று டார்கெட் வைத்து திமுக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தல் பணிகள் திமுகவிற்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+