கொடிகட்டி பறக்கும் குடும்பத்தினர் ஆதிக்கம்! கட்சித் தலைமையின் கோபப்பார்வையில் கோவை மேயர் கல்பனா!
கோவை: கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் பெயரைச் சொல்லி அவரது குடும்பத்தினர் போடும் ஆட்டம் திமுக தலைமையை கடுமையாக கோபம் கொள்ளச் செய்துள்ளது.
குறிப்பாக மேயர் கல்பனாவின் தம்பி மீதும், அவரது அம்மா மீதும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் முகம் சுளிக்க வைப்பவையாக உள்ளன. பொதுவாக உள்ளாட்சிப் பதவிகளில் பெண்கள் இருந்தால் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள் என்று அவர்களது கணவர்கள் மீது தான் புகார்கள் எழும். ஆனால் கோவையில் சற்று மாறுபட்டு மேயரின் தம்பி மற்றும் அம்மா மீது புகார்கள் எழுந்துள்ளன.

கொடுத்த கடனை திருப்பிக் கேட்கிறார்கள் என்பதற்காக கடன் கொடுத்தவர் வீட்டுக்கு மேயரின் தம்பி குமார் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்ததாக வெடித்துள்ள புகார் கட்சி ரீதியாகவும், கோவை மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்காக நிவேதா சேனாதிபதி, இளஞ்செல்வி கார்த்திக், மீனா லோகு என பலரும் போட்டி போட்ட நிலையில் அவர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு கல்பனாவை மேயராக கொண்டு வந்து அமர்த்தினார் அப்போதைய கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி.
படையப்பா படத்தில் வரும் ''மாப்பிள்ளை அவருங்க அவர் போட்டிருக்கும் ஆடை என்னதுங்க'' என்ற செந்தில் நகைச்சுவை வசனத்தை போல், மேயர் கல்பணா தாங்க, ஆனால் முடிவுகள் எடுப்பது அவர் இல்லைங்க என நம்மிடம் குமுறுகிறார்கள் கோவை மாநகர திமுகவினர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி சிறைக்கு சென்ற பிறகு கல்பனா மீதான எதிர்ப்பு கட்சியினர் மற்றும் கவுன்சிலர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால் நெல்லையை போல் கோவை மாநகராட்சியிலும் மேலிடத்தின் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இது குறித்து நாம் விளக்கம் அறிய மேயரை தொடர்பு கொண்ட போது, எதிர்முனையில் பேசியவர், இந்த அலைபேசி எண் வீட்டு உபயோகத்தில் இருக்கிறது என்றும் பி.ஏ.விடம் சொல்லி வேறு அலைபேசி எண் அனுப்புகிறேன் எனவும் கூறி நமது தொடர்பை வேகவேகமாக துண்டிப்பதிலேயே குறியாக இருந்தார்.
மாற்றப்பட்ட புதிய எண்ணை நீங்களே சொல்லலாமே சார் என நாம் வினவிய போது, அதனை காது கொடுத்துக் கேளாமல் தொடர்பை துண்டித்துவிட்டார். இதனிடையே அவர் கூறியது போல் எந்த பி.ஏ.வும் நம்மை தொடர்பு கொள்ளவும் இல்லை, மேயரிடம் பேசவும் விடவில்லை.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications