Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு?

Subscribe to Oneindia Tamil

கோவை: தி.மு.க.வில் தென் மாவட்ட தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்த 1,720 பேர் அழைக்கப்பட்டு இருந்தார்கள். விருப்ப மனு அளித்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். இதேபோல் பலரிடமும் நேர்காணல் நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் (வடக்கு, மத்திய), நீலகிரி மாவட்ட தொகுதிகளுக்கும், மாலை கிருஷ்ணகிரி, திருப்பூர் (கிழக்கு, மேற்கு), திண்டுக்கல் மாவட்ட தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது. வருகிற 22-ந்தேதி வரை தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது.

வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கவுள்ளது. பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தங்களது கூட்டணிகளை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இருக்கின்றன. இதில் தி.மு.க., ஒருபுறம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, மறுபுறம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது

DMK senthil balaji

அந்த வகையில் புதுச்சேரி, காரைக்காலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த வேட்பாளர்களிடம் நேற்று முன்தினம் நேர்காணல் நடந்தது. இதில் சுமார் 120-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நேற்று தொடங்கியது.

நேற்று தென் மாவட்டங்களில் வரும் தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதன்படி, நேற்று காலை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்த பலர் அழைக்கப்பட்டிந்தனர். ஒரே நாளில் 1,720 பேர் அழைக்கப்பட்டு இருந்தார்கள்.

நேற்று காலையில் சட்டசபை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ் மற்றும் ஆவுடையப்பன், சுரேஷ்ராஜன், மனோஜ் பாண்டியன், ஞானதிரவியம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் பலர் பங்கேற்றனர்.
இதேபோல் பிற்பகலில், மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்குட்பட்ட 29 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதில் சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்றார். அவரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி வாய்ப்பு விவரங்களை கேட்டார். இதேபோல் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, ராஜகண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன், பெரியகருப்பன் மற்றும் மூத்த நிர்வாகிகள் நேர்காணலில் பங்கேற்றனர்.

வேட்பாளர்களிடம் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். ஒவ்வொரு தொகுதி வாரியாக வேட்பாளர்களை உள்ளே அழைத்து தொகுதி நிலவரம் எப்படி இருக்கிறது? வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? இளைஞர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கேட்டிருந்தார். அப்போது சிலர் தங்கள் கருத்துகளை கூறினார்கள். இந்த நேர்காணலின் போது கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு மற்றும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் (வடக்கு, மத்திய), நீலகிரி மாவட்ட தொகுதிகளுக்கும், மாலை கிருஷ்ணகிரி, திருப்பூர் (கிழக்கு, மேற்கு), திண்டுக்கல் மாவட்ட தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது. வருகிற 22-ந்தேதி வரை தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நடைபெற இருக்கிறது. கோவை உள்பட கொங்கு மண்டல வேட்பாளர் தேர்வில் செந்தில் பாலாஜியின் பங்கு அதிகமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோவையின் 10 தொகுதிகளில் யார் யார் போட்டியிட வாய்ப்பு என்று பார்ப்போம்

சிங்காநல்லூர்: திமுகவின் மாநகர் மாவட்டச் செயலாளர் நா. கார்த்திக் மீண்டும் இங்கு போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. தொகுதிக்குள் அவருக்கு இருக்கும் செல்வாக்கு பலமாகக் கருதப்படுகிறது.

கோவை தெற்கு: இத்தொகுதி திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவரான கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஒருவேளை ம.நீ.ம வேறு தொகுதியைக் கேட்டால், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் களமிறங்கலாம் என்கிறார்கள்

கோவை வடக்கு: திமுகவின் மாவட்டச் செயலாளர் டி.ஏ. ரவி பெயர் பலமாக அடிபடுகிறது. பாஜவின் வானதி சீனிவாசன் இங்கு போட்டியிட்டால், அவருக்குப் போட்டியாக ஒரு வலுவான பெண் வேட்பாளரை நிறுத்தவும் திமுக பரிசீலித்து வருகிறதாம்

தொண்டாமுத்தூர்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோட்டையாகக் கருதப்படும் இங்கு, அவரைத் தைரியமாக எதிர்க்கக் கூடிய கார்த்திகேய சிவசேனாபதி அல்லது ஒரு முக்கிய தொழிலதிபரை நிறுத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்

கவுண்டம்பாளையம்: திமுகவின் பைய கவுண்டர் (எ) ஆர். கிருஷ்ணன் வேட்பாளராகப் பரிசீலிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்

கிணத்துக்கடவு: கடந்த முறை நூலிழையில் வெற்றியைத் தவறவிட்ட குறிச்சி பிரபாகரன் மீண்டும் களமிறக்கப்படலாம்.

பொள்ளாச்சி: தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அல்லது டாக்டர் வரதராஜன் பெயர்கள் ஆலோசனையில் இருக்கிறதாம்.

வால்பாறை (தனி): இத்தொகுதி மீண்டும் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் (CPI) கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

சூலூர்: திமுகவின் தளபதி இளங்கோ அல்லது கூட்டணி கட்சியான கொமதேக-விற்கு ஒதுக்கப்படலாம்.

மேட்டுப்பாளையம்: இங்கு திமுகவின் டி.ஆர். சண்முகசுந்தரம் அல்லது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+