'இது என்னோட மண்-ஒரு பிடி மண்ணகூட எடுக்க முடியாது’ அண்ணாமலைக்கு அந்த 'அண்ணாமலை’ ஸ்டைலில் திமுக பதிலடி
கோவை: என் மண் என் மக்கள் என்ற முழக்கத்துடனான தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரைக்கு பதிலடியாக கோவை திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
லோக்சபா தேர்தலை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை செல்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. ராமேஸ்வரத்தில் இன்று நடைபெறும் இந்த பாதயாத்திரை தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். பாஜகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை தொடக்க விழாவில் பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பதே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமது யாத்திரை தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அண்ணாமலை, இன்று, புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் தொடங்கவிருக்கும் #EnMannEnMakkal நடைப்பயணத்தில் பங்கு பெறவிருக்கும் என் அன்பு
@BJP4TamilNadu சொந்தங்களையும், பாரதப் பிரதமர் @narendramodi
அவர்களின் மக்கள் நலத்திட்டத்தால் பயன் பெற்ற பயனாளிகளையும், பொது மக்களையும் சந்திக்க மிக ஆவலுடன் உள்ளோம்! ஊழலில் ஊறித்திளைக்கும் திமுக அரசுக்கு முடிவுரை எழுத, இராமேஸ்வரத்தில் முதல் அடியை எடுத்து வைப்போம்! என கூறியுள்ளார்.

"என் மண் என் மக்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து அண்ணாமலையின் இந்த யாத்திரை தொடங்குகிறது. கோவையில் திமுகவினர் இந்த யாத்திரை முழக்கத்துக்கு பதிலடி கொடுத்து போஸ்டர்களை ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
கோவையில் பல இடங்களில் திமுகவினர் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி படங்களுடன் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அதில் காலா பட ரஜினி ஸ்டைலில் முதல்வர் ஸ்டாலின் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் " இது என்னோட மண்.. ஒரு பிடிமண்ணக் கூட எடுக்க முடியாது" என்கிற காலா பட வசனமும் இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. திமுகவினரிடன் இந்த போஸ்டர் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2-வது போஸ்டர்: திமுக மாணவர் அணித் தலைவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பெயரில் ராமநாதபுரத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், பற்றி எரியும் மண் உங்கள் மண் இல்லையா? நிர்வாணமாக்கப்படும் பெண்கள் உங்கள் மக்கள் இல்லையா? பதில் சொல்லுங்க Mr. Ex- officer அண்ணாமலை!!! என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications