பம்பர் லாட்டரியில் அதிர்ஷ்டம்.. கோவையில் ஆச்சரியம்.. கோழிக்கோடு வரை ஒரே பரபரப்பு.. யாரந்த கடைக்காரர்
கோவை: கோவை டூ கோழிக்கோடு வரை ஒரு சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. யாரந்த கோயம்புத்தூர் அதிர்ஷ்டசாலி? யாரந்த கோழிக்கோடு கடைக்காரர் என்ற ஆர்வமும் மக்களிடம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை லாட்டரி டிக்கெட்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே, ஆந்திரா, கர்நாடகாவிலும் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.. ஆனால், கேரளாவில் மட்டும் லாட்டரி விற்பனை சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இதன் காரணமாக லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து கொண்டும் இருக்கிறது. அம்மாநில அரசின் முக்கிய வருமானமாக லாட்டரி சீட்டு விற்பனை திகழ்ந்து கொண்டிருக்கிறது.

வருவாய்: மாநிலத்தின் முக்கிய வருவாய் துறைகளில் ஒன்றான லாட்டரி துறை நிதி துறையின்கீழ் செயல்பட்டு வருகிறது. அதனால்தான், வாரம் முழுக்க லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. இதுபோலவே, பண்டிகை காலங்களில் சிறப்பு லாட்டரி சீட்டுகள், அதிக பரிசு தொகையுடன் அறிவிக்கப்படுகின்றது..
பம்பர் லாட்டரி: ஓணம் பம்பர், விஷு பம்பர், கிறிஸ்துமஸ் பம்பர், மழைக்கால லாட்டரி குலுக்கல்கள் என விதவிதமான ஆஃபர்கள் உள்ளன. கடந்த வாரம்கூட, மான்சூன் பம்பர் பிஆர்-98 கேரளா லாட்டரி விற்பனையாகியிருந்தது.. இதில், முதல் பரிசாக 10 கோடி ரூபாய் MD 769524 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது.. அதேபோல, MA 769524 MB 769524 MC 769524 ME 769524 போன்ற எண்களுக்கு தலா 1 லட்சம் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், இந்த முறை அதிர்ஷ்டம் கோவை நபருக்கு அடித்திருக்கிறது.. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் வினயகிருஷ்ணன். அங்குள்ள புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் லாட்டரி கடை வைத்து உள்ளார்...
ஹாஸ்டல் வார்டன்: அதேபோல, கோவையிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், ஹாஸ்டல் வார்டனாக வேலை பார்த்து வருபவர் ராகேஷ்குமார்.. இவர், நடுவண்ணூர் பகுதியை சேர்ந்தவர்.. அடிக்கடி கோழிக்கோடு பஸ் ஸ்டாண்டு லாட்டரி கடைக்கு சென்று, லாட்டரி டிக்கெட் வாங்குவாராம் ராகேஷ்குமார்..
இப்படித்தான் 2 நாட்களுக்கு முன்பு, கோவையில் இருந்து லாட்டரி கடைக்காரர் வினயகிருஷ்ணனுக்கு போன் செய்திருக்கிறார் ராகேஷ்குமார்.. என்னென்ன லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் உள்ளன என்று கேட்டுள்ளார்.
குலுக்கல்: அதற்கு லாட்டரி கடைக்காரர், "ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் 18 டிக்கெட்டு மட்டும் விற்காமல் இருக்கிறது.. ஆனால், இன்னும் கொஞ்ச நேரத்தில் குலுக்கல் நடக்க போகிறது" என்று கூறியிருக்கிறார்.
ஆனால், குலுக்கலுக்குள் கோவையிலிருந்து, கோழிக்கோடு செல்ல முடியாதே என்று யோசித்த ராகேஷ்குமார், "18 டிக்கெட்டுகளையும் நானே வாங்கி கெள்கிறேன்.. ஊருக்கு வந்து பணம் தருகிறேன். உடனே 18 டிக்கெட்டுகளையும் எனக்காக ஒதுக்கி வையுங்கள்" என்று சொல்லியிருக்கிறார்.
அதன்படியே, 18 டிக்கெட்டுகளையும் வினயகிருஷ்ணன் மாற்றி வைத்துள்ளார்... சிறிது நேரத்தில் குலுக்கலும் நடந்தது.. இதில், ராகேஷ்குமாருக்காக மாற்றி வைத்த, ஒரு டிக்கெட்டுக்கு ரூ.75 லட்சம் முதல் பரிசு விழுந்திருக்கிறது..
விலைக்கு டிக்கெட்: இதைப்பார்த்ததுமே கடைக்காரர் வினயகிருஷ்ணன் பூரித்து போய்விட்டாராம். வினயகிருஷ்ணன் நினைத்திருந்தால், ராகேஷ்குமாரிடம் இந்த விஷயத்தை சொல்லாமலேயே மறைத்திருக்க முடியும்.. காரணம், விலைக்கு வாங்கிக் கொள்வதாக சொன்ன அந்த 18 டிக்கெட்டுகளின் நம்பர்கூட, ராகேஷ்குமாருக்கு தெரியாதாம்.
லாட்டரி எண்கள் குறித்த எந்த விவரமும் தெரியாத நிலையில், உடனடியாக ராகேஷ்குமாருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லியிருக்கிறார் வினயகிருஷ்ணன்.. இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த ராகேஷ்குமார், உடனே ஊருக்கு வந்து டிக்கெட்டை வாங்கிக்கொண்டார்.
கடன் சொல்லி டிக்கெட்: இந்த சம்பவம்தான் இரு மாநிலத்திலுமே ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கிறது.. போனிலேயே லாட்டரி டிக்கெட்டை வாங்கி, அதுவும் கடன் சொல்லி வாங்கிய லாட்டரிக்கு 75 லட்சம் ரூபாய் முதல் பரிசு விழுந்திருப்பது பெருத்த வியப்பை அதைவிட தந்துவருகிறது. ஆனால், அதைவிட லாட்டரி கடைக்காரர் வினயகிருஷ்ணனின் நேர்மையானது, ஒட்டுமொத்த மக்களுக்கும் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் தந்து வருகிறது..
இதுகுறித்து, லாட்டரி கடைக்காரர் சொல்லும்போது, "எப்போதுமே இவர்கள் அனைவருமே என்னிடம்தான் லாட்டரி வாங்குகிறார்கள்.. அவர்களால்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. அப்படியிருக்கும்போது, அவர்களை என்னால் எப்படி ஏமாற்ற முடியும்?" என்கிறாராம்.
சபாஷ்: இந்த லாட்டரி டிக்கெட் விவகாரம், கோவை டூ கோழிக்கோடு வரை நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. மற்றொருபக்கம், 75 லட்ச ரூபாய் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலிக்கு வாழ்த்துக்களும், நேர்மையான லாட்டரி கடைக்காரருக்கு பாராட்டுக்களும் குவிந்து கொண்டிருக்கின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications