பழைய ஃபார்மில் தி.க... சென்னையில் தார் சட்டி தூக்கி இந்தி அழிக்கும் போராட்டத்தை அறிவித்த கி.வீரமணி
கோவை : தேசிய கல்விக்கொள்கை, நீட் தேர்விற்கு எதிராக இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் என திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு எதிர்ப்பு, மாநில உரிமை குறித்த பிரச்சார
பயண விளக்க பொதுக்கூட்டம் கோவை சுந்தராபுரத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கருப்புச் சட்டைக்காரன்
அப்போது, புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்விற்கு எதிராக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தங்களது இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "கருப்புச்சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன் என்பதை போல எங்களது வேலை உங்களுக்கு சொல்வது. ஆளுநர் அவரது பணியை செய்யவில்லை.

சமத்துவத்தை காட்டிய முதலமைச்சர்
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 10 மாதங்களில் இந்தியாவின் முதல் முதல்வர் என்ற சிறப்பை பெற்றவர் ஸ்டாலின். சமத்துவ நாள் அன்று நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவரின் வீட்டிற்கு சென்று உணவருந்தி சமத்துவத்தை உணர்த்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக்கொள்கை குறித்து சிறு வெளியீடு ஒன்றை வெளியிட்டுள்ளோம்.

ஆய்வு நடத்தி திமுக அரசு மசோதா தாக்கல் செய்தது
பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் நீட் தேர்வை ஆதரிக்கவில்லை. நீட் தேர்வு தொடர்பாக திமுக அரசு நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்து அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அதன் பின்னரே மசோதாவை கொண்டு வந்தது. ஆனால், இதற்கு முன் ஆட்சியிலிருந்த அதிமுக அவ்வாறு செய்யவில்லை,

படிக்க சொல்வது திராவிட மாடல்; படிக்காதீர்கள் என்பது ஆரியம்
2017 ஆம் ஆண்டு தமிழ் வழியில் படித்த மாணவர்களில் 12 சதவீதம் பேர் வரை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால், நீட் தேர்வு வந்ததற்கு பிறகு 1.7% பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். படிக்க சொல்வது திராவிட மாடல், படிக்காதீர்கள் என்பது ஆரியம். தேசிய கல்விக்கொள்கை என்பது அசலான மனுதர்மம். குலக்கல்வியை விட மோசமான கல்வியை கொண்டு வர முயல்கின்றனர்.

ஒரே சாதி என்று அறிவிக்காதது ஏன்?
நாடு முழுவதும் ஒரே தேர்வு, ஒரே மொழி, ஒரு கலாச்சாரம் என்பதை எப்படி ஏற்க முடியும்? அவ்வாறு சொல்பவர்கள் ஒரே சாதி என்று அறிவிக்காதது ஏன்? புதிய கல்விக்கொள்கை படிக்காதே என்று சொல்கிறது. 3, 5, 8, 10, 12 ஆம் வகுப்புகளில் பல தேர்வுகளை எழுதினாலும் மதிப்பெண்ணுக்கு மதிப்பில்லை. இதையெல்லாம் தட்டிக்கேட்கக்கூடிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.

இந்தி அழிப்பு போராட்டம்
ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை கொண்டு வருவதாக அமித்ஷா சொல்கிறார். அவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மீண்டும் கொண்டு வர பார்க்கின்றனர். இந்திக்கு எதிராக தார்சட்டி தூக்கி போராடிய இயக்கம் திராவிடர் கழகம். வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி சென்னையில் தார்சட்டி தூக்கி இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை நடத்துவோம்." என்றார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை கிரீன் சிக்னல் கொடுப்பாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications