கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மே 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.. தேதியை மாற்றி சொன்ன ஸ்டாலின்

Google Oneindia Tamil News

கோவை: கடந்த 18ம் தேதி பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப எப்படி முடிவு எடுத்தீர்களோ அதேபோல் இந்த 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சூலூர் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். மே 19ம் தேதி தேர்தல் என்கிற நிலையில் 18ம் தேதி என வாய்தவறி ஸ்டாலின் கூறியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் சூலூர் அருகே பாம்பம்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

edappadi palanisamy will remove from CM post on may 18th, says mk stalin

அப்போது அவர் பேசுகையில், "கடந்த 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் எல்லாம் ஒரு சிறப்பான முடிவினை எடுத்து இனி மோடி ஒரு நாளும் பிரதமராக இருக்கக்கூடாது என்று முடிவு செய்து, ராகுல் காந்தி தான் பிரதமராக வர வேண்டும் என்று நினைத்து வாக்களித்தீர்கள்.

எப்படி கடந்த 18ம் தேதி மோடியை வீட்டுக்கு அனுப்ப எப்படி முடிவு எடுத்தீர்களோ அதேபோல் இந்த 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு எடுத்து சூலூர் தொகுதியில் போட்டியிடும் பொங்கலூர் பழனிச்சாமி உதயசூரியன் சின்னத்திலே ஆதரவு தர வேண்டும்.

முதுமையை காரணம் காட்டி சொத்துக்களை பிடுங்கிக்கொண்டு அனாதையாக்கிய மகன்கள்.. ஆட்சியரிடம் தந்தை புகார்முதுமையை காரணம் காட்டி சொத்துக்களை பிடுங்கிக்கொண்டு அனாதையாக்கிய மகன்கள்.. ஆட்சியரிடம் தந்தை புகார்

இப்போது நான் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்ற பாம்பம்பட்டி பகுதியில் நீர் நிலைகள் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே பொங்கலூர் பழனிச்சாமி வெற்றி பெற்று நீர் நிலைகளை மேம்படுத்தி தருவார். நொய்யலாறு , உப்பாற்று நீரை சுத்திகரித்து இந்த பகுதியில் உள்ள குடங்களை நிரப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயத்திற்கு நீர் நிலைகளில் நீர் மட்டம் உயரும்" இவ்வாறு கூறினார்.

English summary
dmk leader mk stalin says edappadi palanisamy will remove from CM post on may 18th by people decision
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X