அவன் குறுக்க மட்டும் போயிறாதீங்க சார்.. பொள்ளாச்சியில் பொலிரோவைக் கவிழ்த்த முரட்டு யானை! பரபர வீடியோ

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கடந்த சில நாட்களாக காட்டு யானை - மனித மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நவமலை பகுதியில், ஒற்றை காட்டு யானை விரட்டி வந்து தாக்கியதால் கார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. காரில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய, யானை ஆக்ரோஷமாக துரத்திய பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி, கோவை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு ஆகிய பகுதிகளில் காட்டு யானை - மனித மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது.

covai elephant video

விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்தாலும் யானைகள் மீண்டும் ஊருக்குள் நுழைந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

இதனையடுத்து யானை மனித மோதல்களை தடுக்க அகழிகள் அமைக்க வேண்டும், மின்சார வேலிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கோவை தடாகம் அருகே நடை பயிற்சி சென்ற நடராஜன் என்பவர் யானை தாக்கி பலியானார். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் நிலையில் தற்போது சாலையில் சென்ற காரை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக துரத்தி பள்ளத்தில் கவிழ்த்த வீடியோ வெளியாகி உள்ளது.

கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நவமலை பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றைக் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்து வருகிறது. இந்த யானை அடிக்கடி ஆழியார் வால்பாறை சாலையில் உலா வருகிறது. இந்தச் சாலை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக பயணிக்கும் சாலை என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து யானையை கண்காணிக்க வனத்துறை அதிகாரிகள் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் ஆனைமலை அருகே இருக்கும் நவமலை பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் பயணித்துள்ளனர் இளநிலை பொறியாளர் விஸ்வநாதன், அவருடன் பணிபுரியும் சந்தோஷ் ஆகியோர் அப்பர் ஆழியார் செல்வதற்காக பொலிரோ காரில் சென்றுள்ளனர். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானை அவர்களை நோக்கி ஆக்ரோஷமாக துரத்தியது. அதிவேகமாக யானை துரத்தியதால் அவர்கள் காரை ரிவர்ஸ் கியரில் இயக்க முயன்றனர். இருந்த போதும் அந்த யானை காரை தாக்கி பள்ளத்தில் தள்ளியது. இதன் காரணமாக சுமார் 10 அடி பள்ளத்தில் அந்த கார் கவிழ்ந்தது.

காரில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த நிலையில் காட்டு யானை ஆக்ரோஷமாக தாக்கும் வீடியோ வெளியாகி பதை பதைப்பை ஏற்படுத்தி உள்ளது. காட்டு யானையை நிரந்தரமாக காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதி மக்கள். அதே நேரத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள், சாலைகளில் மாலை நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் பொதுமக்கள் பயணிக்க வேண்டாம் எனவும், காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினரும் அறிவுறுத்தி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+