தடாகத்தை பயமுறுத்தும் அந்த உருவம்.. கதிகலங்க வைக்கும் காட்டு யானைகள்.. கோவையில் திக் திக்
கோவை: கோவையில் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், தடாகம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து பொருட்களை தின்று சென்ற சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, காட்டு பன்றிகள், காட்டு மாடுகள் உள்ளிட்ட அதிக அளவிலான வன விலங்குகள் உள்ளன. சில சமயங்களில் இந்த வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி குடியிருப்புகளுக்குள் புகுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த விலங்குகள் விவசாயப் பகுதிகளை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மனித விலங்கு மோதல்களும் அதிகரித்து வருகின்றன.

கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, மதுக்கரை, மருதமலை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், கணுவாய், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் உலா வருகின்றன. அவ்வாறு வரும் காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தி சொல்வதும், கடைகளை சேதப்படுத்தி செல்வதும் தொடர்கதையாக உள்ளது.
குறிப்பாக, கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஷெட் அமைத்து தங்கும் வடமாநில தொழிலாளிகள் பயன்படுத்தும் ரேஷன் அரிசியை குறிவைத்து காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்துகின்றன. மனிதர்களின் உணவுக்கு பழக்கப்படும் இந்த யானைகள் தொடர்ந்து குடியிருப்புகள், ரேஷன் கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளன.
ஆக்கிரமிக்கப்படும் நிலங்கள், பிளாஸ்டிக் குப்பைகள், மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குப்பைக் கழிவுகளை கொட்டுவது, விதிமுறைகளை மீறி யானை வழித்தடங்களில் வீடுகள், ரிசார்ட்டுகள் உள்ளிட்டவை அமைக்கப்படுவதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வனப் பகுதிக்குள் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் நேற்று நள்ளிரவில் ரேஷன் கடையை சேதப்படுத்தி உள்ளே இருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களை தின்று சென்றுள்ளது. சத்தம் கேட்டு வந்த ஊர்மக்கள் பட்டாசு வெடித்தும், சப்தம் எழுப்பியும் யானைகளை விரட்டினர்.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பும் இதே கடையை காட்டு யானைகள் சேதப்படுத்தி சென்ற நிலையில், தற்போதும் வந்து சேதப்படுத்தி ரேஷன் பொருட்களை தின்று சென்றுள்ளது. அடிக்கடி இப்பகுதிக்கு வரும் காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவதாகவும், ரேசன் கடை, மளிகை கடைகளை சேதப்படுத்துவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே, வனத் துறையினர் யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வராமல் செல்லும் வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications