ஓரணியில் தீய சக்திகள்..லோக்சபா தேர்தலில் பலப்பரீட்சை.. கோவையில் அண்ணாமலை ஆவேசம்
கோவை: 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் தீய சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளதால் நமக்கு பலப்பரீட்சையாக இருக்கும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். கேவையில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அண்ணாமலை இதனை தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்ற எதிர்கட்சியினர் ஓரணியில் திரண்டுள்ளனர். அதே நேரத்தில் எதிர்கட்சியினரின் பிரதமர் வேட்பாளர் யார் என்று ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் இதனை லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டம் என்று எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர்.

லோக்சபா தேர்தலுக்கு ஒருபக்கம் எதிர்கட்சிகள் தயாராகி வரும் நிலையில் ஆளும் கட்சியான பாஜகவும் நாடு முழுவதும் நிர்வாகிகளை தயார் படுத்தி வருகிறது. பாஜக பலமாக உள்ள மாநிலங்களில் ஒருவித வியூகம் வகுத்தாலும் பாஜக வலிமையற்ற நிலையில் உள்ள மாநிலங்களில் கூட்டணியை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவை ஈச்சனாரி செல்வ மஹாலில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், பாஜக தேசிய பொதுச் செயலாளா்கள் வினோத் தவுடு, சி.டி ரவி மற்றும் தமிழகத்துக்கான மேலிட இணைப் பொறுப்பாளா் பி. சுதாகா் ரெட்டி, முக்கிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோா் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனை நிகழ்ச்சிகளை, தமிழகமெங்கும் ஒரு மாதத்துக்கு பிரசார இயக்கமாக எடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தான் பாஜக தனித்து போட்டியிடும். இல்லாவிட்டால் பதவியையே ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை அதிரடியாக அறிவித்தார். இதனால் பாஜக -அதிமுக கூட்டணியில் உரசல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரை அமித் ஷா சமாதானப்படுத்தினார். அ.தி.மு.க. கூட்டணியையும் உறுதிப்படுத்தினார். அகில இந்திய அளவில் உறுதிப்படுத்தினாலும் மாநில அளவில் இன்னும் இணக்கமான போக்கு ஏற்படவில்லை. அதற்கு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. கூட்டணியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்படியானால் தான் இரு கட்சி தொண்டர்களும் இணைந்து பணியாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தான் இன்று நடக்கு செயற்குழு கூட்டத்தில் தனித்து போட்டியில்லை. அதிமுக உடன் கூட்டணி என்பதை அண்ணாமலை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நவம்பர் மாதம்தான் கூட்டணி பற்றி வெளியிடப்படும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். அதுவரை கட்சியை பலப்படுத்தும் வேலையில் ஈடுபடவேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். லோக்சபா தேர்தலில் தீயசக்திகள் அனைத்தும் ஓரணியில் திரண்டுள்ளதால் பாஜகவிற்கு இந்த தேர்தல் பலப்பரீட்சையாக இருக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications