வாய்ப்பில்லை..கோவையில் அண்ணாமலைக்கு தோல்வி! கணபதி ராஜ்குமாருக்கு ஜாக்பாட்! கருத்து கணிப்பில் ஷாக்.!
கோவை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி அடைவார் என இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நடந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது அந்த கட்சியினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்திய நாடாளுமன்றத்திற்கு 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி என நேற்று வரை ஏழு கட்ட தேர்தல்கள் நடைபெற்றிருக்கிறது.

ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அன்று இந்திய தேசத்தை அடுத்து ஆளப்போகும் பிரதமர் யார் என்பதற்கான விடை கிடைத்துவிடும். அதற்கு முன்னதாக எக்ஸிட் போல் முடிவுகள் தான் தற்போது இந்திய அரசியல் களத்தில் பேசுபொருளாக இருக்கிறது.
எக்ஸிட் போல்: நேற்று ஏழாம் கட்ட தேர்தல் நிறைவடைந்ததும் இந்தியாவின் பல்வேறு முன்னணி ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று முடிவுகள் கூறுகிறது. இந்தியா கூட்டணி 150 முதல் 200 தொகுதிகளில் அவர்களை வெல்லலாம் என்றும் கூறப்படுகிறது.
திமுக வெற்றி: ஜூன் நான்காம் தேதி தான் மக்களின் இறுதி தீர்ப்பு வெளிவரும் கருத்துக்கணிப்புகளை ஏற்கவில்லை என காங்கிரஸ் கூறி வருகிறது. அதே நேரத்தில் பாஜகவினர் எக்ஸிட் போல் கணிப்புகளை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தில் அதே முடிவுகள் பாஜகவுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக 30-ல் இருந்து 40 தொகுதிகள் வரை வெல்லும் என்றே பெரும்பாலான கணிப்புகள் கூறியிருக்கின்றன.
அண்ணாமலைக்கு தோல்வி: இந்த நிலையில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வி அடைவார் என இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் கணிக்கப்பட்டிருக்கிறது. கோவை தொகுதியை பொறுத்தவரை அதிமுக மிக பலமாக இருந்த தொகுதி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையில் பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது மீதமுள்ள தொகுதிகளில் அதிமுக பெருவெற்றி பெற்றது. ஆட்சியைப் பிடித்த திமுகவுக்கு கோவை மாவட்ட மக்கள் பெரிய தோல்வியை பரிசளித்திருந்தனர்.
கணபதி ராஜ்குமார்: இந்த நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் அதிமுக கூட்டணியில் சிங்கை ராமச்சந்திரனும் களமிறங்கினர். இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான கணபதி ராஜ்குமார் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டாம் இடத்தில் அதிமுக வரும் என்றும் அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவார் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இன்ப அதிர்ச்சி: இந்த நிலையில் இந்த கணிப்புகளை பாஜக தலைவர் அண்ணாமலை நிராகரித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,"ஜூன் நான்காம் தேதி அன்று உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. நாங்கள் நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்" பதில் அளித்து இருக்கிறார். அண்ணாமலை போட்டியிட்டகோவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாண்டமான சாலை பேரணியில் பங்கேற்று அவருக்காக வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
தாமரையை கழட்டி வெச்சிட்டு அண்ணாமலை பின்னாடி போகும் ஃபேன்ஸ்.. 2 நாளில் திருப்பம்! பாஜக எதிர்பார்க்கல












Click it and Unblock the Notifications