வாகன ஓட்டிகளுக்கே ஜில்லுனு ஆயிடுச்சு.. "உடனே ஸ்வீட் எடு".. கோயம்புத்தூரே திக்குமுக்காடி போச்சு
கோவை: கோவை போக்குவரத்து போலீசாருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் பொதுமக்களிடமிருந்து குவிந்து வருகின்றன.. இதற்கு என்ன காரணம் தெரியுமா?
உயிரிழப்புகள் ஏற்படாதவண்ணம், சாலை விபத்துகளை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், போக்குவரத்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்தவகையில், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும் வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தியே வருகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் போக்குவரத்து துறை விடாமல் நடத்தி வருகிறது.

விபத்துக்கள்: மற்றொருபுறம், ஹெல்மெட் அணியாமல், விதிமீறும் வாகன ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.. எனினும், நகரங்களில் பெரும்பாலும் உயிரிழப்பு விபத்துக்கள் தலைக்காயத்தால் ஏற்படுகிறது...
அதனால்தான், மோட்டார் சைக்கிள்களில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வண்டியை ஓட்டி செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
டூ வீலர்கள்: இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆடம்பரமாகவும், பகட்டாகவும் தெரிவதற்காக பைக்குகளில், புகை போக்கி, நம்பர் பிளேட், பம்பர் ஆகியவற்றை மாற்றம் செய்து அபாயகரமாகவும், அதிவேகமாகவும் சாலையில் செல்வோரை அச்சுறுத்தும் வகையில் ஓட்டி செல்வதையும் போக்குவரத்து போலீசார் கண்டித்தும், அறிவுறுத்தியும் வருகிறார்கள்.
மொத்தத்தில், விபத்தில்லா மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு அரும்பாடு பட்டு வருகிறார்கள். எனினும், இவ்வளவு முயற்சிகள் எடுத்தும்கூட, சிலர் அணியாமலேயே பைக்கில் செல்கிறார்கள்.
இந்நிலையில், ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில், ஹெல்மெட் அணிந்து பயணிக்கும் நபர்களுக்கு ஸ்வீட் கொடுத்து பாராட்டுகிறார்கள் கோவையில் போக்குவரத்து போலீசார். கோவை மாநகரில் சாலை விதிகளை பின்பற்றாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர். அதே போல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
சபாஷ் நடவடிக்கை: அதன்ஒருபகுதியாகத்தான், கோவை ஜிபி சிக்னலில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஸ்வீட் கொடுத்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.. மற்றொருபக்கம், ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் கொடுத்து அபராதமும் விதித்து வருகிறார்கள்..
கோவை போக்குவரத்து காவலர்களின் நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படித்தான் மதுரை நகரில் விபத்தில்லா மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு போலீசார் முயன்று கொண்டிருக்கிறார்கள்.
விழிப்புணர்வு: சாலை சந்திப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்டு வரும் விழிப்புணர்வை நினைவூட்டி மாணவர்களை நல்வழிபடுத்த வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டும் வருகிறார்கள். அந்தவகையில், மற்ற நகரங்களிலும், இதே நடவடிக்கைகள் இனி பின்பற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications