குறைந்த வாடகைக்கு வேளாண் உபகரணம்.. இ-வாடகை செயலி இருக்கா? தமிழக அரசின் சர்ப்ரைஸ்.. வாவ் உழவன் செயலி

Subscribe to Oneindia Tamil

கோவை: இ-வாடகை செயலி மூலம், கோவையில் விவசாய உபகரணங்களை வாடகைக்கு பெற்று விவசாயிகள் பயன்பெறலாம் என்ற மகிழ்ச்சி தகவலை கோவை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேளாண்மை பொறியியல் துறையின் சார்பாக வேளாண் இயந்திரங்கள், கருவிகள் இயக்குதல், பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.. இந்த முகாமை கோவை எம்பி கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்.. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இம்முகாமை பார்வையிட்டார்.

tamil nadu government

கோவை கலெக்டர்: பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது கலெக்டர் சொன்னபோது, "கோவை மாவட்டத்தில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க இயந்திரமயமாக்கலை அதிகப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காகவே, இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயத்தை எளிதாக்கும் வகையில், விவசாயத்தில் பல்வேறு உபகரணங்கள் குறித்தும், அதற்கான திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கண்காட்சி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.. இந்த உபகரணங்களை எப்படி செயல்படுத்துவது ? எவ்வாறு பராமரிப்பு ? என்பதும் குறித்தும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

உபகரணங்கள்: விவசாயத்திற்கான உபகரணங்களை, இ-வாடகை என்ற செயலி மூலம் விவசாயிகள் வாடகைக்கு எடுத்து பெற்று பயன் பெறலாம். இந்த செயலியை உபயோகிப் பதற்கான பயிற்சி இங்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு உபகரணங்களுக்கும் தகுந்தாற்போல் வாடகை வசூல் இருக்கும் என்பதால், பணத்தை கட்டி அந்த உபகரணங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம்" என்று கேட்டுக் கொண்டார்.

இதுபோலவே, நாமக்கல் மாவட்டத்தில் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தி கொள்ள விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் ச.உமா அழைப்பு விடுத்துள்ளார்.. இந்த உபகரணங்களை பெற வேண்டுமானால் இ-வாடகை செயலி மூலம் வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.. தமிழக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருக்கும் இந்த தகவலானது, தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

காரணம், தமிழகத்தை பொறுத்தவரை, வேளாண் துறையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.. குறிப்பாக, விதைப்பு முதல் அறுவடை முடிய அனைத்து சாகுபடி பணிகளையும் வேளாண் இயந்திரங்கள் மூலமாக மேற்கொள்வதற்காக முனைப்பு காட்டி வருகிறது என்றாலும், ஏராளமான விவசாயிகளுக்கு சொந்தமாக வேளாண் கருவிகள் கிடையாது.

இ-வாடகை: அதனால்தான், வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் தங்களுடைய வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் ரிசர்வ் செய்துகொள்ளும் "இ-வாடகை" என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதன்மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

இதுபோலவே, தமிழக அரசு கொண்டுவந்துள்ள மற்றொரு முக்கியமான திட்டம் "உழவன் செயலி" ஆகும்.. கடந்த 2018 அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உழவன் செயலியில் 22 வகையான சேவைகள் கிடைக்கின்றன..

இப்போது, அனைத்து விவசாயிகளிடமும் செல்போன் உள்ளதால், வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை கைபேசி மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான் இந்த உழவன் செயலி.

முக்கிய நோக்கம்: பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களையும் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்கான வழிமுறைகளையும் விவசாயிகளின் செல்போன் மூலமாக வழங்குவதே இந்த உழவன் செயலியின் முக்கிய நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உழவன் செயலியினை ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐபோன் (iPhone) என்ற 2 செல்போன்களிலுமே டவுன்லோடுசெய்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், https://www.tnagrisnet.tn.gov.in அல்லது https://tnhorticulture.tn.gov.in அல்லது https://aed.tn.gov.in இணையதளம் மூலமாகவும் திட்டம் பற்றிய விபரங்களை விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்..

வேளாண் பெருமக்களுக்கு வேண்டிய விபரங்களை விரைவாக வழங்கி, விவசாயிகளின் தினசரி வாழ்க்கையினை மிகவும் எளிதாக்கி, விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள உழவன் செயலியினை இதுவரை பதிவிறக்கம் செய்யாத விவசாயிகள், வியாபாரிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்ளிட்ட வேளாண்மையில் ஈடுபட்டுள்ள அனைவரும் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து பயனடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+