கோவை ஷாக்: நிறுவனத்திற்கு ஆதரவாக மக்கள் கூடியது எப்படி? ‘வாட்ஸ் அப்பில் மிரட்டல்’.. பரபர தகவல்!
கோவை: கோவையில் ஆயிரக்கணக்கான மக்கள் MyV3 Ads நிறுவனத்துக்கு ஆதரவாக திரண்டுள்ள நிலையில், வந்தால் தான் பணம் கிடைக்கும் என மிரட்டி, அவர்களை வரவழைத்ததாக கூறப்படுகிறது.
MYV3Ads என்ற ஆன்லைன் செயலி நிறுவனம், விளம்பரம் பார்த்தால் வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி, பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்வதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் அந்த நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நிறுவனத்திற்கு ஆதரவாக திரண்ட மக்கள்: இந்நிலையில், அந்த நிறுவனத்தின் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறி, நிறுவனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று கோவை நீலாம்பூர் L&T பைபாஸ் சாலையில் திரண்டனர். லட்சக்கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் பேருந்துகள் மூலமாக கோவைக்கு வந்து கொண்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மோசடி புகார் எழுந்துள்ள நிறுவனத்துக்கு ஆதரவாகவே பொதுமக்கள் திரண்டுள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நிறுவனத்துக்கு ஆதரவாக போராட வரவில்லை என்றால் உங்களுக்கு வருமானம் நின்று விடும் என்று மிரட்டி கூட்டம் கூட்டியதாக புகார் எழுந்துள்ளது.
MyV3ADS நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சர்குலர் அனுப்பியதாகவும், அதில், இன்று அனைவரும் கோவை வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு, இனி எவனாவது MyV3ads பெயரை தவறாக நினைத்தாலே கொலை நடுங்கும் அளவிற்கு கூட்டம் சேர வேண்டும் என அறிவுறுத்தி அனைவருக்கும் வாட்ஸ் அப் மூலம் செய்தி தெரிகிறது.

மிரட்டல் விடுக்கும் வகையில் மெசேஜ்?: சுற்றலில் இருக்கும் அந்த மெசேஜில், "பல லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் நம் நிறுவனம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். அனைத்து உறுப்பினர்களும் நம் நிறுவனத்தில் தொடர்ந்து வருமானம் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர்கள் தவறாமல் வர வேண்டும்.
ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களுக்கு கீழ் 12 லெவலில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்து ஒன்று சேர்ந்து வந்தால் மட்டுமே இதற்கு முடிவு கிடைக்கும். ஆகவே, வருமானம் பெற்று வரும் அனைவரும் தொடர்ந்து வருமானம் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தால் தவறாமல் வாருங்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசடி கும்பல் மீது பயத்தில்: இது தொடர்பாக, புகார்தாரர் அசோக் ஸ்ரீநிதி கூறுகையில், "கோவையில் இன்று கூடியுள்ள கூட்டம் அந்த நிறுவனத்துக்காக வரவில்லை. நீங்கள் வரவில்லை என்றால் உங்கள் வருமானம் கட் ஆகிவிடும் என வாட்ஸ் அப்பில் மிரட்டும் வகையில் செய்தியை வெளியிட்டு, மக்களை வரவழைத்துள்ளனர். அவர்களும் பயந்து போய் தங்கள் பணத்தை இழந்துவிடுவோம் என்பதற்காக வந்துள்ளனர்.
Ponzi schemeகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டவை. எம்.எல்.எம் பிசினஸ் மூலம் இந்தியாவில் ஆண்டுதொறும் பல கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அண்மையில் ஹிஜாவு நிறுவனம் 1000 கோடி ரூபாய் மோசடி செய்தது. இதுநாள் வரை, மோசடி நிறுவனங்கள் மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆனபிறகு மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள். அதன் பிறகு வழக்குப் பதிவு செய்யப்படும்.
ஆனால், இப்போது நாம் கொடுத்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதல் முறையாக மோசடியை தடுப்பதற்காக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். தங்கள் மீது தவறில்லை என்றால் நிறுவனத்தினர் முறையாக இந்த வழக்கை எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு அரசையும், காவல்துறையையும் மிரட்டும் வகையில் மக்களை தூண்டிவிட்டு ஒன்று கூட வைத்துள்ளனர். அனுமதி இன்றி நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டியுள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications