ஓயாத சண்டை.. இறுதியில் ஒரே கயிற்றில்.. முடிந்து போன சந்தோஷம்.. பரிதாப தம்பதி!
ஒரே கயிற்றில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்
Recommended Video
கோவை: ஒரே கயிற்றில் கணவனும், மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கருமத்தம்பட்டியில் ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள பொண்ணான்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவராஜ். இவர் தனியார் பைப் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஊட்டியை சேர்ந்த கிருத்திகா என்பவருக்கும் போன வருஷம் கல்யாணம் ஆனது.

இருவரும் கேசவராஜின் தந்தை ஜெய்சங்கர் மற்றும் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு மேலாகியும் கேசவராஜ், கிருத்திகா தங்கியிருந்த ரூம் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தார் ஜன்னலை உடைத்து பார்த்தனர்.
அப்போது கேசவராஜ், கிருத்திகா இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த கருமத்தம்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன், மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications