டிடிவி தினகரன் குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பில்லை - நயினார் நாகேந்திரன் பதிலடி
கோவை: பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளே காரணமே என்று கூறியிருந்தார். இந்நிலையில், கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறிய பிறகு அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அவர் ஏன் அப்படி பேசினார் என எனக்குத் தெரியாது என்று டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், தற்போது டிடிவி தினகரனும் பிரிந்துள்ளது அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து டிடிவி தினகரன் மதுரையில் அளித்த பேட்டி ஒன்றில், மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தோம். நான் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பாஜக எப்படி சொல்லும். கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பாஜக காரணம் இல்லை. தொண்டர்களின் முடிவுகளின் காரணமாகவே வெளியேறினோம். பாஜக கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு வெளியேறவில்லை.
பாஜகவில் இருந்து விலகுவது என்பது நாங்கள் நிதானமாக எடுத்த முடிவுதான். தேசிய ஜனநயாக கூட்டணியை அண்ணாமலை நல்ல முறையில் கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை. பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்காத விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் கொடுத்த பதில் மிகவும் ஆணவமிக்கது. பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேறியதற்கு நயினாரின் செயல்பாடுகளே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறிய பிறகு அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அவர் ஏன் அப்படி பேசினார் என எனக்குத் தெரியாது என்று டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியில் போனதற்கான நான் காரணம் என்று அவர் எப்படி சொல்கிறார் எனத் தெரியவில்லை. பாஜக எப்போதுமே கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்றே நினைக்கும். எனது தனிப்பட்ட முறையில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் எல்லா கட்சியினரும் ஒன்று சேர வேண்டும் என்றே நான் எப்போதும் கூறி வருகிறேன். ஓரிடத்தில் கூட நான் யாரையும் வேண்டாம் என்று கூறியதே இல்லை என்றார்.
தேசிய ஜனநயாக கூட்டணியை அண்ணாமலை நல்ல முறையில் கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை என்ற டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. பாராளுமன்றத்தில் டிடிவி தினகரனுடன் கூட்டணியில் இருந்தோம். அதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலில் 165 இடத்தில் போட்டியிட்டு 2 சதவீத ஓட்டுகள் வாங்கியிருக்கின்றனர்.
ஆனால், அதைப் பற்றி நாங்கள் யாரையும் எதுவும் குறை கூறவில்லையே. எங்களுக்கு குறை கூற வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கான ஆட்களும் நாங்களும் இல்லை என்றார். எடப்பாடியின் உட்கட்சிப் பிரச்சனை குறித்து நாம் கருத்து சொல்ல முடியாது. நாங்கள் டிடிவி தினகரனை எப்படி வெறியேற்ற முடியும். எல்லோரும் ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும். தலைவர் பதவியை ஏற்றதில் இருந்து நான் இதைத்தான் கூறி வருகிறேன்.
நான் யாரிடமும் ஆணவமாக நடந்து கொண்டதில்லை. துக்கடா கட்சி என்று நாங்கள் யாரையும் நினைக்கவில்லை. அப்படியென்றால் நாங்கள் ஏன் கூட்டணியில் இணைக்கப் போகிறோம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைத்திருந்தால் இதுபோன்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காது என்றார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications