விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறேனா.. சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்‌ஷன்.. என்ன சொன்னார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் நடைபெற்ற அமரன் பட நிகழ்ச்சிக்கு பிறகு சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அப்போது, விஜயை போல நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சிவகார்த்திகேயன் அளித்த பதிலை இங்கே பார்க்கலாம்.

தமிழ் திரையுலகின் டாப் நடிகரான விஜய் தனது 69 வது படத்தோடு சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார். அரசியல் களத்தில் கால் பதித்து இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த 27 ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.

actor vijay sivakarthikeyan cinema

2026 சட்டமன்ற தேர்தலை டார்கெட் செய்து விஜய் தீவிரமாக அரசியல் களத்தில் பணியாற்ற இருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க, கோலிவுட் உலகில் டாப் நடிகராக இருக்கும் விஜய் இடத்தை அடுத்து நிரப்ப போவது யார்? என பெரிய விவாதமே ஓடிக்கொண்டு இருக்கிறது.

விஜய் நடிப்பில் வெளியான ‛தி கோட்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருப்பார். கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் போது, நடிகர் விஜய், சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்து, வில்லனை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வார். அப்போது சிவகார்த்திகேயன், ‛நீங்கள் முக்கியமான வேலையாக போகிறீர்கள். நீங்கள் போங்கள், நான் இதனை பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன்' என பேசும் வசனம் இடம் பெற்று இருக்கும்.

விஜய் விரைவில் சினிமாவுக்கு முழுக்குப்போட்டு முழு நேர அரசியல்வாதியாக இருப்பதால் அவரது வெற்றிடத்தை சிவகார்த்திகேயனிடம் ஒப்படைத்து சென்றதை குறிப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வந்தனர். இது குறித்த விவாதங்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஓடிக்கொண்டு இருக்க விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற அமரன் பட நிகழ்ச்சிக்கு பிறகு சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அப்போது, விஜயை போல நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சிவகார்த்தியேகன், விஜய் ஒரு சீனியர் நடிகர். அடுத்த அவர் செட் நடிகருடன் ஸ்கிரீன் ஷேர் செய்தார்.. அது அழகாக இருந்தது. அதை மட்டும் நான் பார்க்கிறேன்.

சினிமாவில் நான் சாதிக்கவேண்டியதே நிறைய உள்ளது" என்றார். நிகழ்ச்சியின் போது உங்களை பார்த்து துப்பாக்கி போன்று மாணவர்கள் சிம்பல் காண்பித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்குபதிலளித்த சிவகார்த்தியேகன், "கோட் படத்தில் சின்னதாக துப்பாக்கியை காட்டி ஒரு ரோல் செய்தேன். அதை தான் சொல்றாங்க!" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+