கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எத்தனை தீவிரவாதிகள் இறந்தனர் என கணக்கிட முடியாது.. இந்திய விமானப்படை தளபதி பரபர!

பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை கணக்கிட முடியாது என்று இந்திய விமானப்படை தளபதி தனோவா பதில் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வச்ச குறி தப்பவில்லை.. கோவையில் விமானப்படை தளபதி பேட்டி-வீடியோ

    கோயம்புத்தூர்: பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை கணக்கிட முடியாது என்று இந்திய விமானப்படை தளபதி தனோவா பதில் அளித்துள்ளார். கோயம்புத்தூரில் இதுகுறித்து தனோவா பேட்டி அளித்துள்ளார்.

    பாகிஸ்தானில் கடந்த வாரம் உள்ளே புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான 12 மிராஜ் 2000 விமானங்கள் பாகிஸ்தான் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியது.

    ஆனால் இதில் யாரும் பலியாகவில்லை, கிராமத்தில் உள்ள மரம் மட்டுமே விழுந்தது என்று பாகிஸ்தான் அரசு கூறியது. இதுகுறித்து இந்திய விமானப்படை தளபதி தனோவா பேட்டி அளித்துள்ளார்.

    அபிநந்தன் மீண்டும் போர் விமான பைலட்டாக பணியில் சேர முடியுமா? விமானப்படை தளபதி விளக்கம் அபிநந்தன் மீண்டும் போர் விமான பைலட்டாக பணியில் சேர முடியுமா? விமானப்படை தளபதி விளக்கம்

    ஏன் இல்லை

    ஏன் இல்லை

    இந்திய விமானப்படை தளபதி தனோவா தனது பேட்டியில், இந்த தாக்குதலில் பலியானவர்களை நாங்கள் கணக்கிடவில்லை. நாங்கள் அதில் கவனம் செலுத்தவில்லை. சரியான இலக்கை தாக்குவதில், திட்டமிட்டபடி செயல்படுவதில் மட்டுமே கவனம் செலுத்தினோம்.

    ஏன் முடியாது

    ஏன் முடியாது

    இறந்த தீவிரவாதிகளை எங்களால் கணக்கிட முடியாது. அது எங்களின் வேலையும் கிடையாது. அது அரசின் வேலை. அரசு இறந்தவர்களின் எண்ணிக்கையை வேண்டுமானால் வெளியிடும். ஆனால் நாங்கள் அதை வெளியிட முடியாது.

    வச்ச குறி தப்பவில்லை.. பாக். தீவிரவாதி முகாம்கள் காலி.. கோவையில் விமானப்படை தளபதி பேட்டிவச்ச குறி தப்பவில்லை.. பாக். தீவிரவாதி முகாம்கள் காலி.. கோவையில் விமானப்படை தளபதி பேட்டி

    துல்லியமாக இருந்தது

    துல்லியமாக இருந்தது

    நாங்கள் முதலில் நடத்தியது திட்டமிட்ட தாக்குதல். அதனால் அப்போது மிராஜ் 2000 விமானத்தை அனுப்பினோம். அதனால் அந்த தாக்குதல் மிகவும் கட்சிதமாக நடந்து முடிந்தது. துல்லியமானதாக இருந்தது.

    ஏன் இல்லை

    ஏன் இல்லை

    ஆனால் அடுத்து நாங்கள் நடத்தியது அவசரமான பதில் தாக்குதல். அதனால் அப்போது வானத்தில் இருந்த மிக் 21 விமானத்தை பயன்படுத்தினோம். ஆனால் இது அப்கிரேட் செய்யப்பட்டது. நம்மிடம் எல்லா விமானமும் தயார் நிலையில்தான் இருக்கிறது என்று இந்திய விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார்.

    English summary
    Air Chief Marshal BS Dhanoa on air strikes: IAF is not in a postilion to clarify the number of casualties. The government will clarify that. We don't count human casualties, we count what targets we have hit or not.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X