ஷேரான அந்தரங்க போட்டோ! கர்நாடகாவை அலறவிட்ட ரோகினி, ரூபாவுக்கு 7 மாதத்துக்கு பின் பதவி! முழுவிபரம்
பெங்களூர்: கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரியின் அந்தரங்க போட்டோக்களை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு கர்நாடகா அரசு மாற்றிய நிலையில் தற்போது 7 மாதங்களுக்கு பிறகு புதிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரூபா. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரபரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது அவரிடம் ரூ.1 கோடி வாங்கி கொண்டு அவருக்கு சிறை அதிகாரிகள் சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாக புகார் தெரிவித்து பிரபலமானார்.

அதேபோல் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரோகினி சிந்தூரி. இவரும் அங்கு பிரபலமான அதிகாரியாக அறியப்படுகிறார். இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென்று ரோகினி சிந்தூரி மீது டி ரூபா அடுக்கடுக்கான பல புகார்களை முன்வைத்தார்.
மேலும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ரோகினி சிந்தூரியின் 7 தனிப்பட்ட (அந்தரங்கம்) படங்களை பதிவிட்டதோடு, அந்த படங்களை அவர் 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார் என குற்றம்சாட்டினார். அதோடு அவர் மைசூரில் பணியாற்றியபோது முன்னாள் அமைச்சரான சாரா மகேசை உணவகத்தில் சந்தித்தது தொடர்பான போட்டோவையும் வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டை ரோகினி சிந்தூரி முழுமையாக மறுத்தார். அதோடு டி ரூபாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என கூறினார். ஆனால் டி ரூபா மன்னிப்பு கோரவில்லை. இதையடுத்து இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் நடந்தது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே ரோகினி சிந்தூரி மற்றும் டி ரூபா ஆகியோரை முந்தைய பாஜக அரசு காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியது. இதையடுத்து இருவரும் தலைமை செயலாளரிடம் தங்கள் தரப்பு நியாயத்தை தெரிவித்தனர். அதோடு டி ரூபாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் ரோகினி சிந்தூரி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தான் 7 மாதங்களுக்கு பிறகு ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி மற்றும் ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா ஆகியோருக்கு கர்நாடகா அரசு பதவி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி கர்நாடக அரசிதழ் துறையின் தலைமை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஐபிஎஸ் அதிகாரி டி ரூபாவுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications