கோவை 10 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை! உறவினர் பேட்டிக்கு ஐஜி ரம்யா விளக்கம்
கோவை: கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக உறவினர்களின் குற்றச்சாட்டுக்கு மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: கடந்த 21 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு, 100-க்கு ஒரு போன் வந்தது. அதில் சூலூருக்குள்பட்ட ஒரு இடத்தில் மாலை 5 மணி முதல் குழந்தையை காணவில்லை என்று அந்த புகாரில் தெரிவித்தனர்.

இதையடுத்து புகாரின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையை தேடும் பணிகள் நடந்தன. 250-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் சிறுமியை அவரது பக்கத்து வீட்டு இளைஞர் அழைத்து சென்றது உறுதி செய்யப்பட்டது.
இந்த துப்பை வைத்து குழந்தையை தேடிய போது நேற்று மாலை 6 மணி அளவில் கண்ணம்பாளையம் குளக்கரை பகுதி அருகே புதரில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து அந்த சிறுமியின் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே கார்த்தி என்ற நபர் கண்ணம்பாளையத்தில் ஒரு அபார்ட்மென்டில் இருப்பதை அறிந்து அவரை சுற்றி வளைத்தோம். அப்போது அந்த நபர் தப்பியோட முயன்ற போது கை, கால் உடைந்துவிட்டது.
இந்த வழக்கு மிகவும் சென்சிட்டிவ்வான வழக்கு என்பதால் இதற்கு மேல் எங்களால் எதையும் சொல்ல முடியாது. குழந்தையின் அடையாளத்தை மீடியாக்கள் யாரும் வெளியே காட்டாதீர்கள். குழந்தையின் பெயரோ, புகைப்படமோ, உறவினர்கள் பெயரையோ அடையாளப்படுத்த வேண்டாம் என ஐஜி கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் குழந்தையின் சித்தி பேட்டி அளித்த போது, குழந்தை மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளது. கை, கால்களில் எலும்பு முறிவு, கழுத்து வாய் உடைக்கப்பட்டுள்ளது. முதுகெலும்பு உடைந்துள்ளது, குழந்தை இரவு முழுக்க டார்ச்சர் செய்யப்பட்டுள்ளது என கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஐஜி ரம்யா பாரதியிடம் கேட்ட போது, "இல்லை, குற்றம் நடந்த நேரமே மிகவும் குறைந்த நேரம்தான். நான் ஏற்கெனவே சொன்னது போல் பிரேத பரிசோதனையின் முழு அறிக்கை வரும் வரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது" என்றார்.
சூலூர் அருகே 10 வயது சிறுமி வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போய்விட்டார். அவரை பெற்றோர் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கார்த்தி, மோகன்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதில் கார்த்தி மீது போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது. மோகன்ராஜுக்கு, கார்த்தி செய்த குற்றம் தெரிந்திருந்தும் அவரை காட்டிக் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் அவர் மீது conspiracy வழக்கு போடப்பட்டுள்ளது. கார்த்தி மருத்துவமனையில் இருப்பதால் அங்கு வந்த போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள், கார்த்திக்கை வரும் ஜூன் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications