Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பச்சை சிக்னல்".. இளையராஜாவுக்கு கோவையில் எகிறிய மவுசு.. மக்களுக்கு சூப்பர் விழிப்புணர்வு

: இளையராஜாவுக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

Subscribe to Oneindia Tamil

கோவை: இளையராஜாவுக்கான மசுவு தமிழகத்தில் எகிறி கொண்டே போகிறது.. அந்த வகையில் ஒரு புதுமையான நிகழ்ச்சி கோவையில் நடந்துள்ளது.

இத்தனை காலம் இல்லாமல் அரசியல் ரீதியாக விமர்சனங்களை எதிர்கொண்டார் இளையராஜா. அம்பேத்கருடன் பிரதமரை ஒப்பிட்டு பேசியதையடுத்து, பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்கும் ஆளானார்.

இதையடுத்து, அடுத்த 3 மாதங்களில் நியமன எம்பியாக அறிவிக்கப்பட்டார் இளையராஜா.. அனைத்து கட்சி தலைவர்களும் இளையராஜாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

இந்நிலையில், அமெரிக்காவில் கச்சேரியை முடித்து கொண்டு நேற்று சென்னை திரும்பினார் இளையராஜா.. இவரை வரவேற்க பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பாஜக நிர்வாகிகள் திரண்டு வந்து திரளாக வந்திருந்தனர்.. அதேபோல, டைரக்டர்கள், பாரதிராஜா, கங்கை அமரன், மற்றும் இசை சங்கத்தினர் பலரும் திரண்டு வந்திருந்தனர்..

சிக்னல்

சிக்னல்

இதனால், இளையராஜாவுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டது.. மோடி குறித்த விமர்சனம் கடும் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவருக்கு எம்பி பதவி தரப்பட்ட நிலையில், இந்த பாதுகாப்பை கூடுதலாக வழங்க போலீசார் முடிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது... இளையராஜாவுக்கு வரவேற்பு இப்படி இருக்கிறதென்றால், அவரது பாடல்களை போக்குவரத்து சிக்னலில் பயன்படுத்தும் அளவுக்கு இமேஜ் கூடிவிட்டதாம்.

 ஆட்டோமேட்டிக்

ஆட்டோமேட்டிக்

கோவை மாநகரில் முக்கிய சாலை சந்திப்புகளில் ஆட்டோமேட்டிக் சிக்னல்கள் செயல்பட்டு வருகின்றன.. ஆனால், பாதசாரிகள் இந்த சிக்னலை கடந்து செல்வதற்கு ஏற்ற, பிரத்யேக சிக்னல் என்று எதுவும் கிடையாது.. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்... நடுரோட்டில், வாகனங்களுக்கு மத்தியில்தான் பாதசாரிகளும், சாலையை கடந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. இதற்குதான் கோவை காவல்துறை ஒரு தீர்வை கண்டுள்ளது.

ஸ்பீக்கர்கள்

ஸ்பீக்கர்கள்

சிக்னல்களில் பாதசாரிகளின் பாதுப்பை உறுதி செய்ய, நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்... அதன்படி, சிக்னல்களில் பாதசாரிகள் கடந்து செல்வதற்கு வசதியாக, 'கவுன்ட் டவுன்' சிக்னல் வசதி, பாதுகாப்பான முறையில் கடந்து செல்ல மேம்படுத்தப்பட்ட 'மார்க்கிங்' வசதி, சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செய்திகளை ஒலிபரப்பும் வசதி, பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர் ஒலிபெருக்கி மூலம், அறிவுரை வழங்கும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.

 புது சிக்னல்

புது சிக்னல்

இந்த நவீன வசதிகளுடன் கூடிய, புதிய சிக்னல் திறப்பு விழா, லஷ்மி மில்ஸ் சந்திப்பில் நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இந்த புது சிக்னலை திறந்து வைத்தார்... 'சிட்ரா' மற்றும் ஹோப் காலேஜ் சிக்னல்களிலும், இந்த திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவுரைகளுக்கு மத்தியில், பிரபல இசையமைப்பாளர்களின் இன்னிசை கோர்வைகளும் ஒலிபரப்பாகும் என்றும் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.. பச்சை சிக்னல் போட்டதுமே, இளையராஜாவின் இசை நிச்சயம் இங்கு ஒலிக்கும் என்றும் சொல்லப்படுகிறது..

 ராயல்டி

ராயல்டி

உடனே சோஷியல் மீடியாவில் இதுகுறித்த கமெண்ட்களும் பதிவாகி வருகின்றன.. "நல்ல முயற்சிதான்.. ஆனால் அவருக்கு ராயல்டி கொடுக்க வேண்டியிருக்குமே? என்று கேட்டு வருகிறார்கள்.. மேலும் சிலர், எத்தனையோ, பாடகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள், அதிகாரிகள் இருக்கும்போது, அவர்களுக்கு முன்னுரிமை தந்து, அவர்களது திறமைகளையும் இப்படி ஊக்குவித்தால் நல்லா இருக்குமே? மக்களுக்கும் அவர்களுடைய படைப்பு போய் சேருமே" என்றும் ஆலோசனை சொல்லி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+