ரேஷன் கார்டு.. இன்று ஊருக்குகே வரும் ஆபிசர்ஸ்.. உடனே தீர்வு கிடைக்கும்.. மிஸ் பண்ணிடாதீங்க
கோவை: தமிழ்நாட்டின் அனைத்து தாலுகாவிலும் ரேஷன் கார்டு தொடர்பான குறை தீர்ப்பு முகாம் இன்று நடக்கிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், கடை மாற்றம், தொடர்பான கோரிக்கைகள், புகார்களை தெரிவிக்க விரும்புவோர் மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்று தீர்வு பெறலாம். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களும் தனித்தனியாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது வினியோக திட்டத்தின் சேவைகள் தொடர்பாக ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அக்டோபர் மாதத்துக்கான ரேஷன் அட்டைதாரர்கள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடக்கிறது. இதில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் என்று கூறியுள்ளார்.
சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் 19ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற இருக்கிறது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்பட உள்ளது. மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பொதுவினியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணவும் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும். அதன்படி இன்று (சனிக்கிழமை) பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் மாவட்டத்தில் 5 தாலுகா பகுதிகளிலும் நடக்கிறது.
பெரியகுளம் தாலுகாவில் வடவீரநாயக்கன்பட்டி, தேனி தாலுகாவில் சீலையம்பட்டி, ஆண்டிப்பட்டி தாலுகாவில் மயிலாடும்பாறை, உத்தமபாளையம் தாலுகாவில் பி.ரெங்கநாதபுரம், போடி தாலுகாவில் பூதிப்புரம் ஆகிய இடங்களில் கூட்டம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், கடை மாற்றம், தொடர்பான கோரிக்கைகள், புகார்களை தெரிவிக்கலாம். கூட்டத்தில் கொடுக்கப்படும் புகார்கள், குறைபாடுகள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில், "சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இம் மாதம் இரண்டாவது சனிக்கிழமை ஆயுதபூஜையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் அதற்கு மாற்றாக, 19 ஆம் தேதி ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத் திட்டம் சாா்ந்த தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீா்வு செய்து கொள்ளலாம்.
இந்தக் குறைதீா் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை அல்லது நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கைப்பேசி எண் பதிவு, கைப்பேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்கள் இருப்பின், அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளாா்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications