அண்ணாமலையை விட மாட்டாங்க.. டீம் போட்டு காலி செய்யும் வானதி? கோவையில் இவ்வளவு நடக்குதா? அடடா
கோவை: அண்ணாமலைக்கு வாக்கு சதவிகித ரீதியாகவே எதிரான சூழ்நிலைதான் கோவையில் நிகழ்கிறது, அண்ணாமலைக்கு எதிராக திமுக மட்டும் இல்லை. வானதி சீனிவாசன் அண்ணாமலைக்கு எதிராக இருக்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
கோவை லோக்சபா தேர்தல் களம் தற்போது சூடு பிடித்து உள்ளது. கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார். ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார்.
2019 பொதுத் தேர்தல். கோவையில் அதிமுக + பாஜக + பாமக +தேமுதிக + தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்து வாங்கிய வாக்குகள் 31% மட்டுமே. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாங்கியது 46%. இப்போது திமுக கூட்டணி அப்படியே உள்ளது.
ஆனால் பாஜக கூட்டணியில் அதிமுக , தேமுதிக இல்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் சேர்ந்திருக்கு. இவர்களிடம் 11% வாக்கு வேறு கோவையில் உள்ளது. அப்படி இருக்க அண்ணாமலைக்கு கோவை களநிலவரம் சாதகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சரி இந்த தேர்தலில் அங்கே கள நிலவரம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
பேட்டி: மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், மோடி பாண்டி பஸாரில் பிரச்சாரம் செய்தார். ஆனால் அது வாக்குகளாக மாறுமா என்று தெரியாது. பாஜகவிற்கு சில இடங்களில் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற திட்டம் உள்ளது. கோவையில் அண்ணாமலை வெல்வது சாத்தியமா என்று தெரியவில்லை. அண்ணாமலை, முருகன், பொன்னார், நயினார், தமிழிசை, ஓ பன்னீர்செல்வம், ராதிகா, தினகரன் ஆகிய 8 பேர் வெல்ல வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.
இவர்கள் வலிமையானவர்கள். இவர்கள் வெல்ல வேண்டும் என்று பாஜக narrative செட் செய்ய பார்க்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் வெல்ல வாய்ப்பே இல்லை. ஏன் அண்ணாமலையே வெல்ல வாய்ப்பு இல்லை. அண்ணாமலைக்கு எதிராக திமுக மட்டும் இல்லை. வானதியே அண்ணாமலைக்கு எதிராக இருக்கிறார். அண்ணாமலை கூடவேதான் வானதி இருக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் இருக்கிறார். ஆனால் அவர் அண்ணாமலைக்கு எதிராக உள்ளார். அங்கே பெரிய உள்ளடி போய்க்கொண்டு இருக்கிறது. வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். கட்சியை விட்டு நீக்கிவிடுவார்கள். அரசியலில் இதெல்லாம் சாதாரணம் இல்லை.
நீங்கள் ஆளுமையாக இருக்கும் ஏரியாவில் வேறு ஆள் வந்து நின்றால் விட மாட்டார்கள். மோடி மீண்டும் வந்தால் இவர் அமைச்சர் ஆகும் வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்க இவரின் லோக்கல் அரசியல் காலி ஆகலாம். இதை எல்லாம் வானதி யோசித்து பார்ப்பார். அண்ணாமலையை எப்படி வானதி விடுவார். வேலுமணிக்கும் இதே பிரச்சனைதான். வானதி - வேலுமணி கூட்டணி அமைத்து அண்ணாமலையை கவிழ்க்க பார்ப்பார்கள்.
அண்ணாமலைக்கு கள நிலவரம் சரியாக இல்லை, திமுக எதிர்ப்பால் வாக்கு பிரிகிறது. கொங்கு வேளாளர் வாக்கு பிரிகிறது. மற்ற கம்யூனிட்டி வாக்குகள் திமுகவிற்கு செல்லும். கொஞ்சம் இந்துத்துவா வாக்குகள் அண்ணாமலைக்கு செல்லும். கணபதி ராஜ்குமார் நல்ல இடத்தில் இருக்கிறார். அதனால் இங்கே திமுக வெல்லும் வாய்ப்பு உள்ளது.
அண்ணாமலைக்கு வாக்கு சதவிகித ரீதியாகவே எதிரான சூழ்நிலைதான் கோவையில் நிகழ்கிறது, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications