கோவை வேகமாக கலர் மாறுதே.. குவியும் ஐடி நிறுவனங்கள்.. களமிறங்கிய பெரிய கை.. டெக் புரட்சி
கோவை: பிரபல ஐடி நிறுவனம் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் கோவையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
கடந்த 2 வருடங்களாகவே கோவையில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. அங்கே தொழில் செய்வதற்கு ஏதுவான சூழல் உருவாகிக்கொண்டு இருக்கிறது. கடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கூட கோவையில் பல்வேறு முதலீடு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அதேபோல் கடந்த பட்ஜெட்டிலும் கோவைக்கு என்று பல அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில், தகவல் தொழில்நுட்பம் வாழ்வியல் அறிவியல் விண்வெளி பொறியியல் துறைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற உயர் தொழில்நுட்ப அலுவலகங்களுக்கான தேவை அதிகரிக்கிறது.
வளரும் கோவை: இதனை கருத்தில் கொண்டு 20 லட்சம் சதுர அடியில் இரண்டு கட்டங்களாக 1100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன வசதியுடன் தகவல் தொழில்நுட்ப பூங்கா கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும் .
ஐடி பூங்கா தவிர்த்து கோவையில் தனியாக இன்னொரு தொழிற்பூங்கா அமைக்கப்படும். என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை முதலீடு: இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக பிரபல ஐடி நிறுவனம் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் கோவையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. KGISL SEZ இல் ~300 பேருக்கு ஆரம்ப வேலை வாய்ப்புடன் புதிய அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக கோவையில் ஐடி புரட்சி நடக்க தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் சாலை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தற்போது கோவைக்கு உள்ளேயும் மாநகராட்சி சாலை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. அதோடு இல்லாமல் கோவை டைடல் பார்க் பகுதிகளை அழகுபடுத்தும் வேலைகள் தொடங்கி உள்ளன. நியுயார்க் ஐடி பார்க் ஸ்டைலில் இங்கே இருக்கும் சாலைகளை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. சாலைக்கு நடுவே பூங்கா அமைக்கவும், சாலை ஓரங்களை அழகு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணிகள் முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர்களும், அரசு செயலாளர்களும், துறைத் தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதனை கள ஆய்வு செய்தும், பணி முன்னேற்ற கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்ய திட்டமிட்டவுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கோவைக்கான திட்டங்கள்: முக்கியமாக மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஒரே நேரத்தில் முக்கியமான நல்ல செய்தியை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் வெளியிட்டு உள்ளார்.
மதுரை, கோயம்புத்தூருக்கு அமைக்கப்பட உள்ள முழுமையான டிபிஆர் ரிப்போர்ட் அளிக்கப்பட்ட பின்பும் அங்கே பணிகளை தொடங்க மத்திய அரசு இன்னும் அனுமதிக்கவில்லை என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்படும். சென்னை மெட்ரோ 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் பணத்தில்தான் கடன் வாங்கி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பட்ஜெட்டில் கோவை, மதுரைக்கு மெட்ரோ அமைக்க மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அனுமதி அளித்ததும் மாநில அரசின் நிதியும் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு அனுமதி இல்லாத காரணத்தால் இந்த இரண்டு திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. சென்னை மெட்ரோவிற்கு நிதியை மத்திய அரசு கொடுத்தால் கோவை, மதுரை மெட்ரோ மீது அரசு கவனம் செலுத்த முடியும்.
கோவையில் 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை கணியூர் வரையில்தான் முதல் கட்டமாக இந்த திட்டம் கொண்டு வரப்படும்.
அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை. சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை. மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர், மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
இது போக மதுரையில் அமைக்கப்பட்டது போலவே பிரம்மாண்டமாக கோவையில் விரைவில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும். கோவைக்கு என்று சிறப்பாக கைத்தறி சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்பது உட்பட மொத்தமாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 10000 கோடிக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications