கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்சி, ஜாதி, மத பேதமின்றி பொறுப்பாக வாக்களிக்க வேண்டும்.. ஜக்கி வாசுதேவ் அட்வைஸ்!

Google Oneindia Tamil News

கோவை: கட்சி, மதம் , சாதி வேறுபாடு இன்றி யார் பொறுப்பாக கிராம முன்னேற்றத்திற்காக செயல்படுவார்கள் என பார்த்து வாக்களிக்குமாறும் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 27 மற்றும் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2ஆம் தேதி வெளியாகிறது.

Jaggi Vasudev says about local body elections

ஈஷா யோக மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலை பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்த பஞ்சாயத்து தேர்தல் நாட்டில் மிகவும் முக்கியதுவமானது. மக்களுக்கு இதன் முக்கியத்துவம் முழுமையாக தெரியவில்லை.

பஞ்சாயத்து அமைப்பு கிராமத்தில் உள்ள சிறிய நாடாளுமன்றம் போன்றது. கிராம மக்கள் தேவையை இங்கேயே தீர்மானித்து , தீர்வு கொண்டு வர வாய்ப்பு உள்ளது.

தெற்கு பசிபிக் தீவு, நியூசிலாந்தில் முதலில் பிறந்தது 2020 புத்தாண்டு.. வான வேடிக்கைகளுடன் வரவேற்பு தெற்கு பசிபிக் தீவு, நியூசிலாந்தில் முதலில் பிறந்தது 2020 புத்தாண்டு.. வான வேடிக்கைகளுடன் வரவேற்பு

எனவே அதை மக்கள் முழுமையாக பயன்படுத்தி அனைவரும் ஓட்டு போட வேண்டும். பொறுப்பாக இருப்பவர்கள் என நம்பிக்கை உள்ளவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

கட்சி, மதம் , சாதி வேறுபாடு இன்றி யார் பொறுப்பாக கிராம முன்னேற்றத்திற்காக செயல்படுவார்கள் என பார்த்து வாக்களிக்க வலியுறுத்தினார்.

English summary
Jaggi Vasudev says that we have to caste vote apart from party, caste, religious discrimination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X