ஜம்மு காஷ்மீர் தாக்குதல்.. கோவை மாநகரில் உஷார்படுத்தப்பட்ட போலீஸ் - முக்கிய சாலைகளில் வாகன சோதனை

Subscribe to Oneindia Tamil

கோவை: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 27 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டுப் பயணிகளும் உயிரை இழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து கோவை மாநகரில் இரவு நேரத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்கள் மற்றும் சாலைகளில் போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டுள்ள கொடூரமான தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள், மனைவியின் கண் முன்னரே கொடூரமாக கொல்லப்பட்டுள்ள இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகியுள்ளனர்.

jammu-and-kashmir-attack-police-on-alert-in-coimbatore-city-vehicle-checks-on-major-roads

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சீத்தின் லஷ்கர் இ தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ராணுவ உடை அணிந்து இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்துக்குள் 4 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கியால் சுட்டு சுற்றுலார் பயணிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் மகாராஷ்டிரம், தமிழகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியா மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளின் பெயர்களைக் கேட்டு இந்துவா என்பதை உறுதி செய்விட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சிலரின் மதத்தை உறுதி செய்வதற்காக பேண்ட் ஜிப்பை கழற்ற சொன்னதாகவும் கூறப்படுகிறது. மதம் பார்த்து மட்டுமே பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், முஸ்லிம் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். பெண்கள், குழந்தைகள் கொல்லப்படவில்லை. இந்த தாக்குதலில் ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கோவை நகரிலும் இரவு நேரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம் உட்பட முக்கிய இடங்களில் ரோந்துப் பணிகள் இரவு நேரத்தில் அதிகரிக்கப்பட்டன. கோவை மாநகருக்குள் நுழையும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. உக்கடம், செல்வபுரம் உட்பட நகரின் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.

இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவற்றில் ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின்னரே வாகனங்களை போலீசார் விடுவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+