இஸ்லாமியர்களை தீவிரவாதிபோல் சித்தரிக்கும் என்ஐஏ.. சோதனை என்ற பெயரில் துன்புறுத்தல் - ஜவாஹிருல்லா
கோவை: சோதனை என்ற பெயரில் கோவையில் இஸ்லாமிய மக்களை என்.ஐ.ஏ. தீவிரவாதிகளை போன்ற சித்தரிப்பதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்து இருக்கிறார்.
கோவையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை கோவை, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோவையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து என்ஐஏ பல்வேறு இடங்களில் சோதனை என்று கூறிக்கொண்டு இஸ்லாமிய குடும்பத்தினரை துன்புறுத்தி வருகிறது.
யார் இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தி இருந்தாலும் அவர்களை கைது செய்வதையும் தண்டிப்பதையும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் விசாரணை என்ற பெயரில் அரபு மொழி கற்றுக்கொண்ட முன்னாள் மாணவர்களின் குடும்பத்தினரை குறி வைத்து அதிகாலையில் வீட்டு கதவை உடைப்பது, இஸ்லாமியர்களை அழைத்து சென்று மக்கள் மத்தியில் இஸ்லாமிய சகோதரர்களை தீவிரவாதிகளை போன்று சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது.
உலகில் பல்வேறு நாடுகளில் பேசும் மொழியாக அரபு மொழி உள்ளது. அரபு மொழி பயின்ற மாணவர்களின் குடும்பங்களை என்ஐஏ சோதனை என்ற பெயரில் துன்புறுத்துகிறார்கள். இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி அவர்களுடைய லேப்டாப், ரொக்க பணம் போன்றவற்றை எடுத்து சென்றுவிடுகின்றனர்.
இதனால் வீட்டு உரிமையாளர்களும் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று கூறி வீட்டை காலி செய்ய வற்புறுத்தி வருகிறார்கள். என்ஐஏ தீவிரவாதிகளின் கூடாரம் போல் கோவையை சித்தரித்து வருகிறது. மாலேகான் குண்டு வெடிப்பை யார் நடத்தியது? ரயில் குண்டு வெடிப்பை அபினவ் பாரத் இயக்கத்தினர்தான் நடத்தினார்கள் என நாங்கள் கண்டு பிடித்து கொடுத்தோம்.
சிறுபான்ப்மை மக்களின் உணர்வுகளை துன்புறுத்தும் வகையிலும் தண்டிக்கும் விதமாகவும் என்ஐஏ அவதூறு வழக்கு பதிவு செய்து வருகிறது. அசாருதீன் ஏற்கனவே என்பவர் எற்கனவே குற்ற வழக்கில் சிறையில் உள்ளார். அவரை கார் குண்டு வெடிப்பு வழக்கிலும் அரபு மொழி பயிலும் மாணவர்களோடு தொடர்பு படுத்தி என்ஐஏ வழக்கு பதிவு செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications