கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது! 20 தொகுதி இடைத்தேர்தல்களில் இரட்டை இலையில் அதிமுக போட்டியிடக் கூடாதா? இதென்ன சோதனை

Google Oneindia Tamil News

கோவை: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி ,ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவர் கையெழுத்திற்கு இரட்டை இலை சின்னத்தை வரும் இடைதேர்தல்களில் வழங்க கூடாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.

கோவையில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வெற்றிவேல் தொடர்ந்த வழக்கில் தங்களால் முடிவெடுக்க முடியவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்டது.

தூத்துக்குடி கோவிலில் கலாட்டா கல்யாணம்.. கடும் போராட்டத்துக்கு பின் திருநங்கையை மணந்த வாலிபர் தூத்துக்குடி கோவிலில் கலாட்டா கல்யாணம்.. கடும் போராட்டத்துக்கு பின் திருநங்கையை மணந்த வாலிபர்

நடவடிக்கை

நடவடிக்கை

அப்படி பார்க்கும் போது வரும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் இரட்டை இலை சின்னம் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க முடியுமா என்ற கேள்வி தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் எழுந்துள்ளது.

ஏற்கவில்லை

ஏற்கவில்லை

தேர்தல் ஆணையம் நேற்று வழங்கிய உத்திரவு தெளிவற்ற நிலையில் உள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட இருக்கின்றேன். தற்போது அதிமுகவில் இபிஎஸ்- ஓபிஸ் உடன் இருக்கும் 5000 பேர் மட்டுமே திருப்தியாக இருக்கின்றனர். லட்சக்கணக்கான தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். கட்சி ஆட்சியை நடத்தாமல், ஆட்சி தற்போது கட்சியை நடத்துகிறது. கிளை அளவில் உள்ள செயலாளர்களும், தொண்டர்களும் இப்போது பொறுப்பில் இருப்பவர்கள் ஏற்கவில்லை.

பலவீனப்படுத்த முடியும்

பலவீனப்படுத்த முடியும்

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரு வழக்குகள் நிலுவையில் ,ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவர் கையெழுத்திற்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க கூடாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட உள்ளேன். அதற்காக இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என நான் கேட்கவில்லை. கட்சி பைலா திருத்தம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. கட்சியை பலகீனப்படுத்தும் செயலில் இப்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்குகளை காரணம் காட்டி கட்சியை பலவீனப்படுத்த முடியும் என்பதால் இதை எதிர்க்கிறேன்.

அதிமுககாரன்

அதிமுககாரன்

ரஜினி ஒரு அணியாகவும் திமுக ஒரு அணியாகவும் போட்டி என சொல்வதை ஏற்க முடியாது. திமுக அதிமுக மட்டுமே தனி தனி அணிகளாக போட்டி களத்தில் இருக்கும். தற்போது கட்சிக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பதவி பறி போன 18 எம்.எல்.ஏக்களை இன்னமும் அதிமுகவில் இருந்து நீக்கவில்லை. அவர்களை கட்சிக்கு வாருங்கள் என இவர்கள் அழைப்பது என்பது காமெடியாக அறிவிப்பாக உள்ளது. நான் இப்போதும் அதிமுககாரன்தான் என்றார் அவர்.

English summary
K.C.Palanisamy will file petition demanding EPS and OPS should not use twin leaves for byelection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X