கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெடிக்கல் லீவு போட்டு பணப் பட்டுவாடா செய்கிறார் ஒரு அதிகாரி.. அதையும் தாண்டி வெல்வோம்.. கமல் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    மெடிக்கல் லீவு போட்டு பணப் பட்டுவாடா செய்கின்றனர் - கமல் அதிரடி- வீடியோ

    கோவை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ள கமல்ஹாசன், பல்லாக்கில் ஏறி அமர்வதை விட, அதை தூக்கி சுமக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் மருத்துவ விடுப்பில் சென்று பணப்பட்டுவாடா செய்யும் அதிகாரியையும் தாண்டி நாம் வெல்வோம் என்றும் கமல் தெரிவித்தார்.

    கோவை கொடிசியா மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் அறிமுக விழா மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், வளரும் தமிழகம் கட்சி தலைவர் துரையரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது ஒரே மேடையில் 40 தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்த கமல்ஹாசன், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்.

    நயன்தாராவை ராதாரவி விமர்சித்தது வருத்தம் அளிக்கிறது- கமல் வேதனை நயன்தாராவை ராதாரவி விமர்சித்தது வருத்தம் அளிக்கிறது- கமல் வேதனை

    வாழ்வாதாரம்

    வாழ்வாதாரம்

    இதையடுத்து பேசிய கமல்ஹாசன், பணமதிப்பிழப்பின் மூலம் கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி, இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்தார்கள். ஏழைகளின் வாழ்வாதாரத்தை அழித்தார்கள் என குற்றம்சாட்டினார். மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாவோயிஸ்ட் கலந்ததாக கூறி மாணவனையும், மீனவனையும் அடித்து கருப்பு சாயம் பூசினர்.

    கவுரி லங்கேஷ்

    கவுரி லங்கேஷ்

    கூவத்தூர், டெல்லியில் விவசாயிகள் நிர்வாண போராட்டம், நீட்டினால் மாணவி அனிதா தற்கொலை, எழுத்தாளர் கெளரி லங்கேஷ் படுகொலை கோவையில் அதிமுக பேனர்களினால் ஏற்பட்ட விபத்தில் ரகுநாத் உயிரிழப்பு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ஆகிய சம்பவங்களை சுட்டிக்காட்டிய கமல்ஹாசன், இதை கேட்டால் தேசபக்தி இல்லை என்பார்கள்.

    வேடிக்கை

    வேடிக்கை

    ஜல்லிக்கட்டு இந்த மய்யத்தின் முதல் புள்ளி. இளைஞர்கள் மீதான தாக்குதல் பேட்டரி. மாணவி அனிதா சுவிட்ச். நீட் வேண்டாம் என்ற அரசும், நீட் தான் வழி என்றவர்களும் ஒரே கூட்டணியில் இருக்கின்றனர். ஈழத்தில் தமிழர்களை கொன்றவர்களை வேடிக்கை பார்த்தவர்களும் ஒரே கூட்டணியில் இருக்கின்றனர். மேலும் மதுரை மார்க்சிஸ்ட் பெண் கவுன்சிலர் லீலாவதியை கொன்றவர்களை காட்டுமிராண்டி கூட்டம் என்று கோஷம் போட்டவர்களோடு சேர்ந்து, கம்யூனிஸ்ட்கள் தேர்தலை சந்திக்கிறார்கள்.

    60 ஆண்டு கால திராவிட ஆட்சி

    60 ஆண்டு கால திராவிட ஆட்சி

    பொள்ளாச்சி விவகாரத்தில் எஸ்.பி. வாய் தவறி பெண்ணின் பெயரை சொன்னார். அது போல் உள்துறை செயலாளரோ அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இந்த அரசு அமைதியாக உள்ளது. 60 ஆண்டு கால திராவிட ஆட்சியில் செய்த சாதனை விவசாயிகளை டெல்லியில் நிர்வாணமாக நிற்க வைத்ததும், விவசாயிகளை தற்கொலை செய்ய வைத்ததும் தான். அணை நீர் ஆவியாகாமால் தடுக்க தெர்மாகோல் போட்டதை தவிர, வேறு என்ன நவீன திட்டங்களை கொண்டு வந்தீர்கள்.

    இளைஞர்கள்

    இளைஞர்கள்

    மக்கள் நீதி மய்யம் தேர்வு செய்யப்பட்டால் பசுமை தொகுதியாக மாற்றுவோம். தண்ணீர் பிரச்சணை போர்கால அடிப்படையில் சரி செய்யப்படும். இயற்கை விவசாயத்தை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்ப்போம். படித்த இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் கொண்டு செல்வோம். சவுக்கிதார் என பிரதமர் மோடியை குறிப்பிட்டு அவர் பணக்கார வீட்டு காவலாளி. ஏழைகளை வராமல் தடுக்கும் காவலாளி என விமர்சித்தார்.

    மக்களாட்சி

    மக்களாட்சி

    ஒகி, கஜா புயலுக்கு நிதி கொடுக்கவோ, தமிழகத்தை பார்க்கவோ வராத மோடி தேர்தலுக்கு 4 முறை வருகிறார்.
    மநீம வேட்பாளர்கள் வெற்றி பெற்று, சரிவர வேலை செய்யவில்லை எனில் பொதுமக்கள் புகாரளிக்கலாம். விசாரணையில் உறுதிசெய்யப்பட்டால், ராஜினாமா கடிதம் கட்சி அலுவலகத்தில் இருந்து வரும். மக்கள் நீதி மய்ய ஆட்சி, மக்களாட்சியாக இருக்கும்.

    அஸ்திவாரங்கள்

    அஸ்திவாரங்கள்

    மேற்கு மண்டல போலீஸ் அதிகாரி ஒருவர் மருத்துவ விடுப்பில் சென்று பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளார். இதையும் தாண்டி மநீம வெல்லும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

    பல தொகுதிகளில் தான் போட்டியிட வேண்டுமென விருப்ப மனுக்கள் வந்தன. ஆனால் பல்லாக்கில் ஏறி அமர்வதை விட, பல்லாக்கை சுமக்கவே ஆசைப்படுகிறேன். இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். அதன் அஸ்திவாரங்கள் வேட்பாளர்கள் என தெரிவித்தார்.

    English summary
    Kamal Haasan says that a police officer puts medical leave and he is distributing money for voters.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X