தமிழகத்தில் சிஸ்டம் கெட்டு போய்விட்டது.. ரஜினி போல் கூறிய கமல்ஹாசன்
கோவை: தமிழகத்தில் சிஸ்டம் கெட்டு போய்விட்டதாக ரஜினிகாந்த் கூறியதை போல் கமல்ஹாசனும் கூறியுள்ளார்.
கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். கோவை 2024 , கோவை வழிநடத்தும் தமிழகத்தை என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையை அக்கட்சியின் பொது செயலாளர் அருணாச்சலம் பெற்றுக் கொண்டார்.
இது குறித்து பேசிய அக்கட்சியின் துணை தலைவரும் கோவை வேட்பாளருமான மகேந்திரன், புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை நிறைவேற்றப்படும், ஜி.எஸ்.டி. வரி 5 சதவிகிதமாக குறைக்கப்படும், சிறு குறு தொழில் மேம்பாடு, திறன் மேம்பாடு மையம் உள்ளிட்ட 24 திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை குறிப்பிட்டார்.

தேர்தல் அறிக்கை
மனித விலங்கு மோதல், நீர் நிலைகளின் மறுசீரமைப்பு, நகர்புற காடு வளர்பேபுத் திட்டம் , கழிவு மேலாண்மை இடம் பெற்றுள்ளதையும் சுட்டிகாட்டினார்.
இந்த திட்டங்கள் 5 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சாத்தியமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கமல் பதில் அளித்தார்.

தமிழகத்தில்
எந்த திட்டமும் சொன்ன படிப் செய்து முடிக்கப்படாத காரணத்தால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு திட்டம் சாத்தியம் என்ற நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம். இந்த மனநிலைக்கு தமிழகமே வந்துவிட்டது என்பதுதான் சோகம்.
தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுவிட்டது. இதை கெடுத்தது நாம்தான்.

ஆரோக்கியமான
கேள்வி கேட்காமல் இருந்தததால் ஆட்சியாளர்கள் ஆணவத்தில் இருக்கிறார்கள் என்றார் கமல்.
பழைய வெற்றிலை போட்ட சிக்கனகாரர் கதை சொல்லி விளக்கிய பேசிய கமல்,
அகற்ற வேண்டியதை தூக்கி போட்டுவிட்டால் நல்ல ஆரோக்கியமான விஷயத்தை செய்யலாம் எனக் கூறினார்.

கண் கூசும் அளவு
நான் நடிகனாக என் தகுதிக்கு மீறிய நிறைய அன்பை மக்களிடம் பெற்றுவிட்டேன்.
இப்போது மக்களிடம் சென்று பார்க்கும் போது இந்த 60 வருடங்களில் அனுபவிக்காத அன்பை இப்போது அனுபவிக்கிறேன். ஒவ்வொரு சிற்றூருக்கும் செல்லும் போதும் மக்கள் காட்டும் அன்பை பார்க்கும் போது கண் கூசும் அளவுக்கு டார்ச் லைட் ஒளிர்கிறது.

மாநிலம்
இரண்டு பிரதமர் வேட்பாளர்கள் அமைவதில் இழுபறியாக தான் இருக்கும், அதற்கு ஒரு காரணமாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தை முன்னாடி தூக்கி வைப்போம். இதே போல ஒவ்வொரு மாநிலமும் செய்தால் புத்தம் புதிய பிரதமர் உருவாகுவார்.

புரட்சி
மூன்றாவது பிரதமர் வேட்பாளர் இருக்க வேண்டும் என ஆசைபடுபதாகவும் தெரிவித்தார்.
தேசிய அரசியலில் ஆர்வம் உள்ளது எனக் கூறிய கமல் எங்க வீடு தமிழகம், அதை தான் முதலில் சுத்தம் செய்ய வேண்டும் எனக் கூறினார்.
ஒரு புரட்சியின் விழும்பில் தமிழகம் இருப்பதாகவும் அதில் அனைவரும் பங்கு பெற வேண்டும் எனக் கூறினார்.

மனப்பாங்கு
மூன்றாவது அணி வந்தே தீரும் என நம்பிக்கை தெரிவித்த கமல், மூன்றா அணிக்கான மனப்பாங்கு மக்களிடம் வந்துவிட்டது என்றும் நாடெங்கிலும் உள்ள பெரும் தலைவர்கள மூன்றாம் அணி குறித்து யோசிக்கிறார்கள் என தெரிவித்தார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications