ஹெலிகாப்டரில் சர் சர்ருன்னு பறந்து வரும் கமல்ஹாசன்.. யார் பணம் தெரியுமா.. "உண்மையை" உடைத்த கோவை
கோவை: ஹெலிகாப்டரில் பயணம் செய்ய தனக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன். இதனால் அங்கு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
கமல் எளிமையானவர் என்கிறார்கள்.. ஆனால் ஹெலிகாப்டரில் வந்து பிரச்சாரம் செய்கிறார்.. வெளியூர்க்காரர் என்பது போன்ற விமர்சனங்களை எதிர் தரப்பினர் முன்வைக்கிறார்கள்.

கோவையில் ஏன் போட்டி?
இந்த விமர்சனங்களுக்கு கமல் பதிலடி கொடுத்துள்ளார். கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தேர்தல் பிரச்சார பொது கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமலஹாசன் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது கோவையில் ஏன் போட்டி என கேட்கின்றனர், நான் ஏன் போட்டியிட கூடாது என கேள்வி எழுப்பினார்.

எல்லோரும் உறவுகள்
234 தொகுதிகளிலும் என் உறவுகள் இருக்கின்றனர் என கூறிய அவர், ஆரம்பத்தில் இருந்தே ஒரு சாதி ,மத பிரிவில், நாத்திகன் என என்னை அடைக்க முயன்றார்கள் என தெரிவித்தார். தேர்தலில் மயிலாப்பூரில் நான் நிற்பேன் என்றார்கள் எனவும், அங்கு என் உறவினர்கள் இருக்கின்றனர் என்பதால் அங்கு நிற்பேன் என்றார்கள், ஆனால் "அங்கும்" என் உறவினர்கள் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை என தெரிவித்தார்.

நடிப்பு மட்டம் இல்லை
சட்ட மன்ற தேர்தலுக்கு பின் நான், நடிக்க போய்விடுவேன் என்று நடிப்பு தொழில் ஏதோ கேவலமானதை போலச் சொல்கின்றனர். நடிப்பு என் தொழில். ஆனால் உங்களுக்கு அரசியல்தான் தொழில் எனவும், இந்த வித்தியாசத்தால்தான் நீங்கள் தோற்க போகின்றீர்கள், நாங்கள் ஜெயிக்க போகின்றோம் எனவும் தெரிவித்தார்.

கிரிமினல் குற்றம்
33 சதவீத கிரிமினல்கள் அந்த இரு கட்சிகளிலும் இருக்கின்றனர். எது பெட்டர் சாய்ஸ் என்பது உங்களுக்கு தெரியும். இந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெயர் கோவைக்கு இருந்தது. முதலில் ஆட்சியில் இருந்தவர்கள் மின் வெட்டால் தொழில்களை வேறு மாநிலத்திற்கு ஓடிவிடும்படி செய்தார்கள். அடுத்து ஆட்சியில் இருந்தவர்கள் கடன் சுமையை 7 லட்சம் கோடியாக மாற்றி இருக்கின்றனர். தண்ணீர் இல்லாத ஊரில் வாசிங் மிஷன் கொடுப்பதாக சொல்கின்றனர். ஆளத் தகுதியும், ஆளும் தன்மையும் ஆட்சியாளர்களுக்கு இல்லை.

சங்கநாதம்
கோவை எங்கள் கோட்டை என ஊழல்வாதிகள் சொல்லி கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு இல்லை என்று சொல்லுங்கள். வெள்ளையனே வெளியேறு என்பதை போல கொள்ளையனே வெளியேறு என்று சொல்வோம். ஹெலிகாப்டரில் நான் வரும் பணம் யார் பணம் என்கின்றனர்.. அது என் பணம்.. நேர்மையாக சம்பாதித்த பணம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் பணம்
கோவை எங்கள் கோட்டை என ஊழல்வாதிகள் சொல்லி கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு இல்லை என்று சொல்லுங்கள். வெள்ளையனே வெளியேறு என்பதை போல கொள்ளையனே வெளியேறு என்று சொல்வோம். ஹெலிகாப்டரில் நான் வரும் பணம் யார் பணம் என்கின்றனர்.. அது என் பணம்.. நேர்மையாக சம்பாதித்த பணம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

கமல்ஹாசன் பேச்சு
ஆட்சியாளர்கள் போகும் போது கஜானாவை சுரண்டி இருப்பார்கள், அவர்களை தண்டிப்பதுடன், தமிழகத்தை ஒன் டிரில்லின் எக்கானமி இருக்கும் மாநிலமாக மாற்ற வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்தார். பொதுக்கூட்ட மேடையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். இரவு 10 மணிவரை தொடர்ச்சியாக பேசிய நிலையில் நேரம் கடந்து விட்டது என அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையினருக்கு நன்றி சொல்லி தன் பேச்சை முடித்துக்கொண்ட கமல்ஹாசன், மேடையில் இருந்து கிளம்பினார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications