Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவில் நடந்த அசிங்கம்.. கோவை அரசு மருத்துவமனை டாக்டரிடம் அத்துமீறல்.. அதிர்ந்த கோயம்புத்தூர் மக்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அரசு மருத்துவமனை விவகாரத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை. சம்பந்தப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் சொல்வதென்ன?
கோவை அரசு மருத்துவமனையில், கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இருந்து சிகிச்சைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.

டாக்டர்கள்: இங்கு பணிபுரியும் பெண் டாக்டர், நேற்றுமுன்தினம் இரவு, பார்க்கிங்கில் இருந்த தன்னுடைய டூவீலரை எடுக்க சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய பேன்டை அகற்றிவிட்டு, அரைகுறை ஆடையுடன் பெண் டாக்டரை நோக்கி கையை நீட்டியுள்ளார். அப்போது அந்த நபர் குடிபோதையில் இருந்தாராம்.

Coimbatore Female Doctor

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் டாக்டர் சத்தம்போட, அருகில் இருந்த செக்யூரிட்டிகள் விரைந்து சென்று , இளைஞரை பிடிக்க முயன்றனர்.. ஆனால், அதற்குள் அந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார்.

திடீர் போராட்டம்: இந்த சம்பவம் தொடர்பாக, பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கினார்கள்.. மருத்துவமனை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், தப்பியோடிய இளைஞரை கைது செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். நேற்று காலை, மருத்துவமனை வளாகத்துக்குள் அதே இளைஞர் நடமாடியிருக்கிறார். உடனடியாக மருத்துவமனை செக்யூரிட்டிகள் இளைஞரை சுற்றிவளைத்து பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர்.

அந்த இளைஞர் பெயர் மயங்க் டல்லார் என்பதும், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த இவருக்கு 25 வயதாகிறது என்பதும் தெரியவந்தது.. தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்..

நிர்மலா: இந்த சம்பவம் பற்றி அந்த மருத்துவமனையின் டீன், டாக்டர் நிர்மலா சொல்லும்போது, "கடந்த 14-ந்தேதி மர்ம நபர் ஒருவர், எங்களுடைய பெண் பயிற்சி டாக்டரிடம் தவறாக நடக்க முயன்றார். தன்னுடைய வண்டியில் ஏற முயன்ற அந்த பெண் டாக்டரிடம் அடையாளம் தெரியாத நபர் தவறாக நடக்க முயன்ற விவரம் உடனடியாக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்த நபரை பிடித்து சென்று விசாரித்து வருகின்றனர்... எங்களுடைய பயிற்சி மருத்துவ அதிகாரியும் சம்பவ பகுதியில் நிலைமை என்னவென கண்காணிப்பதற்காக சென்றிருக்கிறார்" என்றார்.

பார்க்கிங்: சம்பவத்தன்று பார்க்கிங் வண்டியை எடுப்பதற்காக பெண் டாக்டர் சென்றபோது, இரவு 9.30 மணி இருக்குமாம்.. அங்கிருந்த இளைஞர், தன் பேன்டை அகற்றிவிட்டு, அரைகுறை ஆடையுடனேயே பெண் மருத்துவரை நோக்கி கையை நீட்டியிருக்கிறார். அப்போது அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர், அந்த இளைஞரை தள்ளிவிட்டு, அலறிக்கொண்டே அங்கிருந்து ஓடியிருக்கிறார்.

அதற்கு பிறகு அந்த இளைஞரை, செக்யூரிட்டிகள் தேடிப்பார்த்தும், எங்கே சென்றார் என்று தெரியவில்லை.. பின்னர், நள்ளிரவு ஒரு மணி அளவில், அந்த இளைஞர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு, சிகிச்சைக்காக வந்திருக்கிறார்.. சிறிய காயத்துக்கு மருந்து போடுவதற்காக நள்ளிரவில் வந்திருக்கிறார். அவரை அடையாளம் கண்ட பிற டாக்டர்களே அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

விசாரணை: போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியபோது, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருப்பதாக சொல்கிறார்கள்.. எனினும் விசாரணை தீவிரமாகி கொண்டிருக்கிறது.
கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்காரம் சம்பவத்தையடுத்து, நேற்று முன்தினம், தேசிய மருத்துவ ஆணைய செயலர் ஸ்ரீனிவாஸ், மருத்துவ கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியிருந்தது. அதில், நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவக்கல்லூரி மற்றும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருந்தன.

சுற்றறிக்கை: அதில், "மருத்துவ கல்லுாரிகளில், டாக்டர்கள் மீதான வன்முறைகளும், வன்கொடுமைகளும் தொடர்கின்றன. டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என, அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான செயல் திட்டங்களை, மருத்துவ கல்லுாரி நிர்வாகங்கள் வகுக்க வேண்டும். புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருத்துவ துறைகள், விடுதி, கல்லுாரி மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும் செயல் திட்டங்கள் இருக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுத்தல் அவசியம். போதிய எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில், ஆண், பெண் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்" உட்பட பல்வேறு நெறிமுறைகள் வெளியிட்டிருந்தன..

ஆனால், அன்றைய தினமே, கோவையிலும் இப்படி ஒரு அசிங்கம் நடந்திருக்கிறது.. மருத்துவமனையில் மருத்துவர்களே பாதுகாப்பு இல்லாத நிலைமை நாளுக்கு நாள் அரங்கேறிவருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் உண்டுபண்ணி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+