6 ஆடுகள்.. பக்கத்திலேயே மயில் பிரியாணி.. கோவை முருகன் கோயில் நிலத்தில் அந்த காட்சி? கோயம்புத்தூரிலா?
கோவை: கோவை முருகன் கோயிலில் நடந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பதற செய்துள்ளது.. இந்த காரியத்தை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை.. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
சமீப காலமாகவே, மிருகங்களை வேட்டையாடுவதும், அதை உணவாக உட்கொள்வதும் அதிகரித்து வருகிறது.. கடந்த வருடம் ஆந்திராவில் ஒரு கொடுமை நடந்தது,
புலி சாதம்: ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில், ஆக்கப்பள்ளி என்ற கிராமத்தில் நிறைய விவசாய நிலங்கள் உள்ளன.. இங்கு வனவிலங்குகள் புகுந்து பயிர்களை அழித்துவிடுவதால், பலமுறை வேலிகளை அமைத்துள்ளனர். ஆனால், சாதாரண வேலியை போட்டாலும் விலங்குகள் அவைகளை உடைத்து கொண்டு உள்ளே புகுந்துவிடுவதாக சொல்லி, கரண்ட் வேலிகளை சட்டத்துக்கு புறம்பாக வைத்திருக்கிறார்கள்.

இந்த மின்வேலிகளில் சிக்கி இதுவரை எத்தனையோ வனவிலங்குகள் இறந்திருக்கின்றனவாம். ஒருமுறை இதில் புலி ஒன்று சிக்கி இறந்துவிட்டது. இந்த புலியை கிராம மக்களே சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள். புலியை சமைத்த 12 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்..
மயில் கறி: 10 நாட்களுக்கு முன்பு, இதே தெலுங்கானாவில், பிரணாய் என்பவர், பாரம்பரிய உணவு வகைகளைச் சமைத்து தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். தன்னுடைய வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக, மயில் கறியை சமைத்துள்ளார்.. இந்த வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிரணாயை போலீசார் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கைகள் தொடர்ந்தாலும்கூட, சென்னை உட்பட நாய்க்கறி, காக்கா கறி என்று சாலையோர ஓட்டல்களிலும், இறைச்சி கூடங்களிலும் பீதிகள் கிளம்பியவாறே உள்ளன.
கோவை காரமடை: இப்போதுகூட, கோவை மாவட்டம் காரமடை பகுதியில், கொடூர சம்பவம் நடந்துள்ளது.. காரமடை அருகில் உள்ள குமரன்குன்று முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் மயில்கள் உயிரிழந்து கிடப்பதாக, காரமடை வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் ஒன்று கிடைத்தது.. இதையடுத்து, வனச்சரகர் ரஞ்சித் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்கள்..
அப்போது, முருகன் கோயில் நிலத்தில் அடுத்தடுத்து 7 மயில்கள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.. இந்த மயில்களுக்கு பக்கத்திலேயே 6 ஆடுகள் சுருண்டு விழுந்து இறந்து கிடந்தன.. அவை அனைத்துக்குமே, பிரியாணியில் விஷம் வைக்கப்பட்டுள்ளது.. இந்த உணவை சாப்பிட்ட 7 மயில்கள், 6 ஆடுகள் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
புதைப்பு: இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல, வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் உயிரிழந்த மயில்களுக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications