அதிமுகவுக்கு ஷாக்... த.மா.கா.வில் இருந்து விலகினார் கோவை தங்கம்- வால்பாறையில் சுயேட்சையாக போட்டி!
வால்பாறை: ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் வால்பாறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப்ப் போவதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த கோவை தங்கம் அறிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக அதிமுகவின் கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தியவர் கோவை தங்கம். வால்பாறை தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அதிமுகவே அந்த தொகுதியை தன்வசம் வைத்துக் கொண்டது. இதனால் கோவை தங்கம் கடும் அதிருப்தி அடைந்தார். அத்துடன் புதன்கிழமையன்று முக்கிய முடிவை அறிவிப்பேன் என்றும் கோவை தங்கம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளார் கோவை தங்கம். அத்துடன் வால்பாறை சட்டசபை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன் என்றும் கோவை தங்கம் தெரிவித்துள்ளார்.
வால்பாறை தொகுதியானது திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் மாஜி எம்.எல்ல்.ஏ. ஆறுமுகம் போட்டியிடுகிறார். கோவை தங்கம் வால்பாறை தொகுதியில் 2001, 2006-ல் வேட்பாளராக இருந்தவர். இப்போது கோவை தங்கமும் போட்டியிடுவதால் வால்பாறை தேர்தல் களம் மிக கடுமையானதாக இருக்கும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications