கோவையில் பெண் காவலர் ஆய்வாளர் சஸ்பெண்ட்.. குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி டிஐஜி அதிரடி
கோவை பெண் போலீஸ் கலையரசி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
கோவை: கோவையில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் காவலர் ஆய்வாளர் கலையரசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. இதற்கான உத்தரவை கோவை சரக டிஜஜி. முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் சமீப காலமாகவே அடிதடி, தகராறு, திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்றவைகள் அதிகரித்து வருகிறது..
இப்படி குற்றப்பிரிவு சார்ந்த புகார்கள் தொடர்பாக, ஏராளமான மக்கள் மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் புகார் தந்தும் வருகின்றனர்.

காவல்துறை
அந்த புகார்கள் மீது காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்கின்றனர்... ஆனால், நிதி மோசடி, நகை மோசடி போன்ற சில வகை புகார்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், குற்றம் சாட்டப்படும் நபர் தப்பும் வகையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதாகவும், சில இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் குற்றம் சாட்டும் நபருக்கு ஆதரவாக செயல்பட்டு, புகார் அளித்தவர் மீதே வழக்குப்பதிந்து அவர்களை அலைகழித்தல் போன்ற நிகழ்வுகளும் நடப்பதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பேட்டி
இதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையரும் முன்பு ஒருமுறை பேட்டி தந்திருந்தார்.. அதில், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புகார் அளிக்க சென்று, காவல்துறை அதிகாரிகளின் ஒருதலைபட்சமான செயல்பாடுகளால் பொதுமக்கள் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால், என்னிடம் தயங்காமல் வந்து புகார் அளிக்கலாம்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அப்போதுமுதலே ஆய்வாளர் கலையரசி என்பவர் மீதான புகார்கள் அதிகரிக்க தொடங்கின.

பொருளாதார குற்றப்பிரிவு
கடந்த காலங்களில் ஏகப்பட்ட புகார்கள் கோவை பெண் போலீஸ் கலையரசி மீது எழுந்தன.. இதையடுத்து சமீபத்தில், இவரை கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுபோலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கலையரசியை திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்தனர்.. ஆனால், இவர் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தபோதுதான், அதிக அளவில் குற்றவாளிகளுக்கு துணை போயுள்ளதாக கூறப்பட்டது.

சஸ்பெண்ட்
எனவே, கலையரசி மீதான பண மோசடி உள்ளிட்ட பல புகார்கள் மேலிட அதிகாரிகளின் பார்வைக்கும் சென்றது. அதுமட்டுமல்ல, மோசடி நிறுவனங்கள் குறித்த புகார்களை கலையரசி உடனடியாக விசாரிக்கவில்லை என்ற புகார்தான் பூதாகரமாக இவர்மீது எழுந்தது. இதையடுத்து, கோவையில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட கலையரசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. இதற்கான உத்தரவை கோவை சரக டிஐஜி. முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications