கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்: வங்கிகளால் மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முகாம் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வருகின்ற 22.09.2025 முதல் 26.09.2025 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டமான இந்த திட்டத்தின் கீழ் வங்கி கடனுக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள், முதல் முறை 10000 ரூபாயும், திரும்ப செலுத்திய பின்னர் 20000 பெறலாம். மூன்றாம் முறை 5000 கடன் பெறலாம்.
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்காக மத்திய அரசின் பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டம் (PM SVANidhi) செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டப்படி சாலையோர வியாபாரிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. அதாவது முறையாக கடனை திரும்ப செலுத்தினால், அப்படியே வட்டி மானியமாக வழங்கப்படும்.

பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டம் என்பது சாலையோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், சிறிய அளவில் கடைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வணிகம் செய்யவும் கடன் வழங்கப்படுகிறது. உள்ளூரில் கந்துவட்டிக்கு 10 வட்டியில் 10 முதல் 50000 கடன் வாங்கி தினசரி வட்டி கட்டி அவதிப்பட்டு வந்த சாலையோர வியாபாரிகள், கடன் வலையில் சிக்கி தவிக்காமல் மீட்க வேண்டும் என்று அரசு கொண்டு வந்ததிட்டம் ஆகும்.
இந்த திட்டப்படி, முதல் முறையாக ₹10,000 வரை முதல் தவணையாகப் பெறலாம். முதல் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தினால், ₹20,000 வரை இரண்டாவது தவணையாகப் பெற முடியும். இரண்டாவது கடனையும் சரியாகத் திருப்பிச் செலுத்தினால், ₹50,000 வரை மூன்றாவது தவணையாகப் பெற முடியும். கடனைத் திருப்பிச் செலுத்தும் போது, வட்டிக்கு மானியம் அளிக்கப்படுகிறது. மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை (Digital Transactions) மேற்கொள்ளும்போது, அதற்கான ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், உணவுக் கடைகள் நடத்துபவர்கள் இந்த கடனை பெற முடியும். அதேபோல் சாலையோரங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்களை விற்கும் கிராமப்புற வியாபாரிகளும் கடன் பெற முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள வங்கி அல்லது நிதி நிறுவனங்களுக்குச் சென்று விண்ணப்பிக்க முடியும்.
இந்நிலையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம் கோவையில நடைபெபற இருக்கிறது. இது பற்றி மாநகராட்சி அறிவிப் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், "கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முகாம் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வருகின்ற 22.09.2025 முதல் 26.09.2025 வரை நடைபெறும் எனவும், இதில் சாலையோர வியாபாரிகள் புதிதாக சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் ரூ.15,000/- பெறவும், ஏற்கனவே வங்கி கடனுக்கு விண்ணப்பித்து கடன் கிடைக்காத வியாபாரிகளும், வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை, மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளவும் மற்றும் உணவு மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம் எனவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications