என்ன நடந்தது? எடப்பாடியை திணற வைத்த 9 பேர்.. அதிமுக கோட்டை "கோவையில்".. திமுக சத்தமின்றி சம்பவம்!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான பேரூராட்சி ஒன்றை திமுக கைப்பற்றி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் முன்பே சத்தமே இன்றி அங்கு திமுக வென்றுள்ளது. எப்படி என்று பார்க்கலாம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை மாவட்ட அளவில் கட்சிகளின் நிர்வாகிகள் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
கட்சி தலைவர்கள் டிஜிட்டல் பிரச்சாரங்களையும் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல தொகுதிகளில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் போட்டி இன்றி வெற்றிபெற்று வருகிறார்கள். கடம்பூரில் 3 சுயேட்சைகள் போட்டியின்றி வென்றனர். அதேபோல் திருச்சியில் 3 வார்டுகளில் 3 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி வென்றனர். மற்ற கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யாதது அல்லது செய்யப்படும் மனுக்கள் நிராகரிக்கப்படுவதால் இப்படி பல்வேறு வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாகவே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு வருகின்றது.

கோயம்புத்தூர்
அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான பேரூராட்சி ஒன்றை திமுக கைப்பற்றி உள்ளது. அங்கு இருக்கும் பெரிய நெகமம் பேரூராட்சி திமுக கைப்பற்றி உள்ளது. இது அதிமுக வலுவாக இருக்கும் பாரம்பரிய ஊராட்சி ஆகும். இங்கு அதிமுக நிர்வாகிகள் பலர் திமுகவை விட வலுவான பின்னணி கொண்டவர்கள். அதோடு கோவை லோக்சபா தொகுதியில் இருக்கும் 6 எம்எல்ஏக்களில் 5 பேர் அதிமுகவை சேர்ந்தவர்கள்.

பெரிய நெகமம் பேரூராட்சி
இதனால் இந்த பெரிய நெகமம் பேரூராட்சியும் கூட அதிமுக "கண்ட்ரோலில்"தான் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அங்கு இருக்கும் 15 வார்டுகளில் அதிமுக சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆனால் திடீர் என்று வேட்புமனுவை தாக்கல் செய்த பின் 9 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றனர். ஆம், 9 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் மட்டுமின்றி மற்ற கட்சி வேட்பாளர்களும் மனுக்களை வாபஸ் வாங்கினார்.

எடப்பாடி பழனிச்சாமி
இதில் எடப்பாடிக்கு நெருக்கமான சில மூத்த அதிமுக நிர்வாகிகளும் அடக்கம். அது மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்களும் மனுக்களை வரிசையாக வாபஸ் வாங்கினார்கள். இதனால் 9 தொகுதிகளில் 8ல் திமுக வேட்பாளர்கள் மட்டும் எதிர்ப்பு இன்றி போட்டியின்றி. இதனால் அந்த 8 தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இன்னொரு வேட்பாளர்கள் சுயேச்சை என்று கூறப்படுகிறது. அங்கு மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.

8 பேர் வெற்றி
இதில் இப்போது 8ல் திமுக வெற்றிபெற்று உள்ளதால், திமுக அந்த பேரூராட்சியை கைப்பற்றி உள்ளது. இதனால் மீதமுள்ள 6 வார்டுகளில் மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது. பெரிய நெகமம் பேரூராட்சியில் திமுக பெற்ற வெற்றி அக்கட்சி தொண்டர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக வலுவாக இருக்கும் கோட்டைதான் கோயம்புத்தூர். ஆனால் அதே கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் திமுக முக்கியமான பேரூராட்சியை கைப்பற்றி உள்ளது.

கோவை வலிமை இல்லை
கோவையில் அவ்வளவு வலுவாக இல்லாத கட்சி திமுக. இந்த நிலையில் இதுபோன்ற பேரூராட்சி வெற்றிகள் கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்த திமுகவிற்கு உதவியாக இருக்கும். வரும் தேர்தல்களில் கட்சி பணிகளை செய்ய இது உதவியாக இருக்கும். இதேபோல் திருப்பூரில் சின்னக்கம்பாளையம் பேரூராட்சியில் திமுக வேட்பாளர்கள் 5 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். அங்கு அதிமுக வேட்பாளர்கள் 5 பேரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications