யூடியுபர் இர்ஃபான் செய்தது கொலை குற்றமில்லை.. போட்டுடைத்த மா.சுப்பிரமணியன்
கோவை: யூடியுபர் இர்ஃபான் விவகாரத்தில் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர் செய்தது ஒன்றும் கொலை குற்றமில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 13 கோடி மதிப்பில் இரண்டாவது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கிவைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் 13 கோடி ரூபாய் செலவில் இரண்டாவது எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி இன்று திறக்கப்பட்டுள்ளது

இந்த மருத்துவமனையில் 2018 இல் இருந்து ஏற்கனவே ஒரு எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் செயல்பட்டு வருகின்றது. அதிகப்படியான எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி தேவை இருப்பதால் புதிய தொழில் நுட்ப வசதியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் தேவை இருந்தது. இந்த இயந்திரம் இல்லாததால் இரண்டு, மூன்று தினங்கள் காத்திருக்க வேண்டிய சூழலும் இருந்தது.
இதையடுத்து, ஜப்பான் நிதி ஆதார உதவியுடன் அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு ஸ்கேன் எடுக்க 40 நிமிடங்கள் ஆகும். ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் 20 நிமிடத்திற்குள் எடுத்துக் கொள்ள முடியும். தினமும் 30 முதல் 35 ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில், இனிமேல் கூடுதலான ஸ்கேனை துல்லியமாக எடுக்க முடியும்.
நரம்பியல், இருதவியல், புற்றுநோய் தொடர்பான பாதிப்புகளை கண்டறிய எம்ஆர்ஐ ஸ்கேன் உதவியாக இருக்கும். தமிழக முதல்வர் 3.5 ஆண்டுகளில் பெரிய வளர்ச்சியை கொடுத்திருக்கிறார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் இந்த அரசால் செய்யப்பட்டுள்ளது. புற நோயாளிகளின் எண்ணிக்கை 2021 இல் 3 ஆயிரம் வரை இருந்தது. இப்போது 4,800 பேராக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவவமனையில் சிகிச்சை பெற விரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை இது காட்டுகின்றது. அதேபோல, மருத்துவமனைக்கு பாதாள சாக்கடை, சாலை சீரமைப்பு பணிகளுக்கு 9.56 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கி இருக்கின்றன. படுக்கை விரிப்பு, தலையணை போன்றவற்றை சலவை செய்ய 2.20 செலவில் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.
பழைய கட்டடத்திற்கும் புதிய கட்டடத்திற்கும் கனெக்டிங் காரிடார் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. கோவையில் 72 நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாநகராட்சிப் பகுதியில் 45 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 45 மருத்துமனைகளிலும் ஒவ்வொரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவியாளர் என 4 பணியிடங்கள் நியமிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வழங்கப்பட்டுள்ளது
இந்த மையங்களில் மருத்துவத் துறை கடமைகளாக காலை 8 முதல் 12 மணி வரையும், மாலை 4 முதல் 8 மணி வரையும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தபட்டு இருந்தது. நேற்று மாலை 4 மையங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இரண்டு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருந்தனர். இரண்டு இடங்களில் மருத்துவர்கள் இல்லாமல் இருந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 500 இடங்களில் இது போன்ற மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் 208 இடங்களில் திறக்க வேண்டியுள்ளது. இன்று முதல் இந்த மருத்துவமனைகளில் காலை, மாலை ஆய்வு செய்து கண்காணிக்கவும், வராமல் இருக்கும் மருத்துவர்களை விடுவிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிக்கு முறையாக வராதவர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
யூடியுபர் இர்பான் விவகாரத்தில் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர் செய்தது கொலை குற்றமில்லை. அவர் செய்தது பெரிய விஷயமுமில்லை. சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை 10 நாட்கள் மூடப்பட்டது. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications