Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தூங்கியது குத்தமா"- கோவிலில் திருடிவிட்டு அசதியில் உறங்கிய கொள்ளையன்.. காலையில் நடந்த தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கோவை: திரைப்பட பாணியில் கோவையில் உள்ள ஒரு கோவிலில் திருடிவிட்டு அசதியில் உண்டியல் அருகிலேயே படுத்து உறங்கிய கொள்ளையனை குருக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்படங்களில் வைகைப் புயல் வடிவேலுவின் எத்தனையோ திருட்டு சம்பவங்கள் தொடர்பான காமெடிகளை பார்த்து ரசித்திருப்போம். 100 ஆவது திருட்டு என ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து போலீஸில் சிக்குவது, போலீஸில் சிக்காமல் இருப்பதற்காக தனது சக திருடர்களிடம் மிளகாய்ப் பொடி தூவுமாறு வடிவேலு கூறிய நிலையில், அந்த மிளகாய்ப் பொடியை திருடிய இடம் முதல் வடிவேலுவின் வீடு வரை தூவி போலீஸில் சிக்கவிடுவது போன்ற பல காமெடிகளை கண்டு சிரித்திருப்போம்.

man-arrested-for-sleeping-near-undiyal-after-robbing-temple-in-coimbatore

அவற்றை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு கோவையில் ஒரு திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டம், கோவைப்புதூரில் உள்ள ஒரு கோயிலில் திருடிவிட்டு, மழை வந்ததால் அசதியில் அங்கேயே கொள்ளையன் படுத்து உறங்கிய நிலையில் விடிந்ததும் போலீஸில் சிக்கிய தரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம், கோவைப்புதூர் அருகே பாலவிநாயகர் முருகன் ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளை செய்த பின்னர் கோவிலைப் பூட்டிவிட்டு குருக்கள் சென்றுவிடுவது வழக்கம். நேற்று முன்தினமும் இரவில் பூஜை நடைபெற்றுள்ளது. பின்னர், குருக்கள் உள்ளிட்டோர் கோவிலைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை கோவில் குருக்கள் பூஜைப் பணிகளை செய்வதற்காக வழக்கம்போல கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது, கோவில் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது தெரியந்துள்ளது. அதன் அருகிலேயே ஒருவர் போதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

இதுகுறித்து, கோவில் குருக்கள் உடனடியாக கோவில் நிர்வாகிக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவம் குறித்து அறிந்ததும் கோவிலில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர். தகவலறிந்த குனியமுத்தூர் காவல் துறையினர் கோவிலுக்கு விரைந்து வந்தனர். கோவில் உண்டியல் அருகில் குறட்டை விட்டு படுத்து தூங்கிய நபரை எழுப்பி விசாரித்தனர்.

அப்போது, அந்த மர்ம நபர் கோவிலுக்குள் கொள்ளை அடிக்க வந்த இடத்தில் பணத்தை திருடிவிட்டு குடிபோதையில் உண்டியல் அருகிலேயே படுத்து உறங்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த சின்னையன் (வயது 42) என்பது தெரியவந்தது.

சின்னையன் மீது காரைக்கால் போலீஸில் ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளன. இதனால் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சின்னையன் கோவைப்புதூர் வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். அங்கு தங்கியிருந்து கட்டட வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது, கோவைப்புதூரில் உள்ள அழகு பால விநாயகர், முருகன், ஐயப்பன் கோயிலை பார்த்ததும் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு சின்னையன் கோவிலுக்குள் நுழைந்துள்ளார். அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் 8,250 ரூபாயை திருடியுள்ளார். பின்னர், கோவில் கருவறையின் கதவை இரும்புக் கம்பி மூலம் உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களையும் திருடியுள்ளார். அப்போது, பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இதனால், மழை நின்றதும் கோவிலை விட்டுச் செல்லலாம் என்று நினைத்து உண்டியல் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளார். சின்னையன் ஏற்கனவே குடிபோதையில் இருந்ததால் அவரால் எழுந்து செல்ல முடியாமல் அங்கேயே படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை கோவில் குருக்கள் சென்ற போது தான் அவருக்கு தான் செய்த சம்பவமும், சிக்கியதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கோவில் நிர்வாகி வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சின்னையனை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். திரைப்பட பாணியில் கோவிலுக்குள் கொள்ளை அடிக்க வந்துவிட்டு படுத்து தூங்கிய திருடன் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+