கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.3 கோடி வாங்கித் தருவதாக போலீசார் பேரம் பேசுறாங்க.. இறந்த மார்ட்டின் ஊழியரின் மனைவி குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    பாதாள அறையுமில்லை, கட்டிலுக்கு அடியில எந்த பணமும் இல்லை மார்ட்டின் மனைவி விளக்கம்- வீடியோ

    கோவை: புகாரை வாபஸ் பெற்றால், ரூ.3 கோடி வாங்கித்தருவதாக போலீசார் தன்னிடம் பேரம் பேசுவதாக, மர்மமாக இறந்த மார்ட்டின் நிறுவன ஊழியரின் மனைவி குற்றம்சாட்டி உள்ளார்.

    கோவையைச் சேர்ந்தவர் லாட்டரி அதிபர் மார்ட்டின். இவருக்கு கோவை உள்பட நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்ட்டின் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்கு நடுவே மார்ட்டினின் உதவியாளராக வேலை பார்த்துவந்த கோவை உருண்டாம் பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமியிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

    சென்னையில் மழை உண்டு.. 18-ஆம் தேதிக்கு பிறகு வங்கக் கடலில் மீண்டும் புயல்- தனியார் வானிலை ஆய்வாளர் சென்னையில் மழை உண்டு.. 18-ஆம் தேதிக்கு பிறகு வங்கக் கடலில் மீண்டும் புயல்- தனியார் வானிலை ஆய்வாளர்

    பிரேத பரிசோதனை

    பிரேத பரிசோதனை

    இந்நிலையில் காரமடை அருகே வெள்ளிங்காடு பகுதியில் ஒரு குளத்தில் பழனிச்சாமி பிணமாக மிதந்தார். அவருடைய உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    தற்கொலை வழக்கு

    தற்கொலை வழக்கு

    பழனிச்சாமி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக வருமான வரித்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    உடலை வாங்க மறுப்பு

    உடலை வாங்க மறுப்பு

    இதனிடையே பழனிச்சாமியின் மனைவி சாந்தா தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் பிரேத பரிசோதனை மீண்டும் தாங்கள் நியமிக்கும் டாக்டர்கள் முன்பு நடக்கவேண்டும் என கூறி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்.

    ரகசியங்கள் வந்திடும்

    ரகசியங்கள் வந்திடும்

    இதனிடையே பழனிச்சாமியின் மனைவி சாந்தா நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எனது கணவரின் சாவுக்கு மார்ட்டின் நிறுவனத்தினர் தான் முக்கிய காரணம். வருமான வரித்துறையில இருக்குறதா சொல்லிக்கிட்டு என் வீட்டுக்கு வந்தவங்க, அவரிடம் விசாரணை நடத்தினாங்க. 25 வருடங்களாக என் கணவர் மார்ட்டின் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர்களின் ரகசியங்களை வெளியே சொல்லிவிடுவார் என நினைத்து அவரை கொலை செய்து விட்டார்கள்.

    போலீசார் பேரம்

    போலீசார் பேரம்

    எனவே நான் கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்து இருப்பதால் புகாரை வாபஸ் பெறுமாறு போலீசார் கூறுகிறார்கள். புகாரை வாபஸ் பெற்றால், ரூ.3 கோடி வாங்கித் தருவதாக என்னிடம் பேரம் பேசுகிறார்கள். எனக்கு பணம் வேண்டாம். என் கணவரின் சாவுக்கு நீதி வேண்டும். சிபிசிஐடி விசாரணை நடத்தினால் தான் முழு உண்மை வரும்" என்றார்.

    English summary
    Coimbatore martin group staff suicide : wife accuses, police 3 crore deal to me if withdraw complaint, police enquiry
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X