நம்ம கோவையில் கணிதமும் இசையும் கருத்தரங்கு! அறிவியலில் ஆர்வமுள்ளவரா? உடனே முன்பதிவு செய்யுங்கள்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் (சிஐடி) 'கணிதமும் இசையும்' என்ற தலைப்பில் இஸ்ரோ விஞ்ஞானி தலைமையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெறுகிறது. அறிவியலில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

சந்திரயான் 3 வெற்றி வரலாற்று சாதனையை ஒருபக்கம் படைத்திருந்தாலும், மறுபுறம் சாமானியர்கள் மத்தியில் விண்வெளி அறிவியல் குறித்த ஈர்ப்பையும் தேடலையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த தேடலுக்கு அறிவு தீணியிடும் வகையில் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி தலைமையில் கணிதமும், இசையும் என்கிற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கத்தை நடத்த இருக்கிறது கோவை தொழில்நுட்ப கல்லூரி. இது குறித்து கல்லூரி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

Mathematics and music seminar is being held in Coimbatore under the leadership of ISRO scientist

"பொறியியல் கணிதமும் இசையும் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் அறிவியல் நிகழ்வினை செப்டம்பர் மாதம் 4ம் தேதியன்று திங்கள் கிழமை இஸ்ரோ விஞ்ஞானி தலைமையில் நடக்க இருக்கின்ற நிகழ்வில் இளம் அறிவியல் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களை கலந்து கொள்ள சி.ஐ .டி கல்லூரி அழைக்கிறது.

கோவை சி.ஐ .டி (கோவை தொழில் நுட்பக் கல்லூரி) கல்லூரியில் அமைந்துள்ள இந்திய பொறியியல் சார் அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கழகம் (Indian Society of Engineering Science and Technology), சி.ஐ .டி கல்லூரி கணிதத்துறை மற்றும் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின்(Department of Science and Technology , Government of India)கீழ் இயங்கும் கணிதவாணி கணித அறிவியல் கழகம்(Kanithavaani Mathematical Sciences Society) ஆகிய அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் அறிவியல் திறன்களையும் புதுமைகளையும் வளர்க்கும் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகின்றது.

இதன்மூலம் அனைவரும் தங்களுடைய திறன்மிகு அறிவியல் மற்றும் பொறியியல்சார் திட்டங்களை இங்கு பகிர்ந்து கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் முடியும். இந்த பிரபஞ்சமானது ஒலிகளாலும் ஒளிகளாலும் சூழப்பட்டு காணப்படுகிறது. இதன் போக்கினை பொறியியல் சிந்தனை கொண்டும் கணித அறிவினை கொண்டும் ஆராய்வதன் மூலம் பல்வேறு பயன்களை நமது மனித சமூகம் பெற முடியும். இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு "பொறியியல் கணிதமும் இசையும்" என்ற தலைப்பில் முன்னாள் விஞ்ஞானி பிரசன்னா தலைமையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டு அதிலிருந்து வரும் ஒலிகளில் பொறியியல் கணிதம் எப்படி தொடர்புப்படுகிறது என்ற செயல்முறை விளக்கம் காட்டப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள கணிதம், இசை மற்றும் பொறியியல் துறைசார்ந்தவர்களை கோவை சி.ஐ .டி கணிதத்துறை அழைக்கிறது. அனுமதி இலவசம். ஆனால் முன் பதிவு அவசியம். இதில் கலந்து கொள்ள விரும்பும் ஆர்வலர்கள் சி.ஐ .டி கணிதத்துறை தலைவர் பேராசிரியரிடம் 9940353449 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யவும்" என்று கூறப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+