மசூதிக்குள் நுழைந்த வேலுமணி.. செம்ம சான்ஸ் இருக்காமே.. திகைத்து போன தொண்டாமுத்தூர்..!
தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் வேலுமணி வாக்கு சேகரித்தார்
கோவை: தன்னுடைய தேர்தல் பிரச்சரத்தில் கோவை குனியமுத்தூரையே இன்று அசர வைத்துவிட்டார் அமைச்சர் எஸ்பி வேலுமணி..!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. இதில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாகவும், இப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் உள்ள, எஸ்பி வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார்..
அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களிடமும் வாக்கு சேகரித்தும் வருகிறார். இதில், இஸ்லாமிய மக்களின் ஆதரவு கொஞ்சம் கூடுதலாக வேலுமணிக்கு இந்த முறை விழும் என்று ஒரு கணிப்பு சொல்கிறது. இதற்கு ஒரு குட்டி பிளாஷ்பேக் உள்ளது.

மதுக்கரை
6 மாதத்துக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. மதுக்கரை பகுதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கென தனியாக தங்களுக்கு கபர்ஸ்தான் நிலம் வழங்க வேண்டும் என்பதுதான் இவர்களின் 20 வருட கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணியிடமும் அந்த பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

உறுதி
அமைச்சரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி தந்திருந்தார்.. அதை மனதில் வைத்து கொண்டு, மதுக்கரையில் முக்கிய சாலை அருகே இடத்தை அதிகாரிகளை வைத்து தேர்வு செய்தார்.. ஒன்றே முக்கால் ஏக்கர் பரப்பளவில், உள்ள அந்த இடத்தின் மதிப்பு, சுமார் ஒரு கோடியே 40 லட்சம் எனறு சொல்லப்பட்டது. இறுதியில், இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கப்ரஸ்தான் அமைத்து தந்து, அந்த மக்களின் நன்மதிப்பை நேரடியாக பெற்றார் அமைச்சர்.

வாக்குறுதி
அதுமட்டுமல்ல, இஸ்லாமியார்களிடம் இதை பற்றி ஒருமுறை சொல்லும்போதுகூட, எப்படியாவது கபர்ஸ்தான் நிலம் வழங்கப்படும் என்று வாக்குறுதி தந்திருந்தேன்.. அதன்படியே இப்போது நிறைவேற்றி இருக்கிறேன்.. இதுபோலவே, கிறிஸ்தவர்களுக்கும் தனியாக மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்... இன்னும் என்னென்ன வளர்ச்சி தேவையோ என்னிடம் சொல்லுங்கள், எல்லாவற்றையும் செய்து தருகிறோம்" என்றார் வேலுமணி.

அமைச்சர்
ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருந்து வரும் நிலையில், அமைச்சரின் இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது... நேற்றுகூட தொண்டாமுத்தூர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தவர், திடீரென மசூதிக்குள் நுழைந்தார்.. அங்கு நடந்து கொண்டிருந்த சிறப்பு தொழுகையிலும் அமைச்சர் ஈடுபட்டார். அதன்பிறகு மசூதிக்கு வெளியே, அனைத்து இஸ்லாமிய சகோர்களிடமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து இச்சமுதாய மக்களை அரவணைத்து வரும் நிலையில், கொஞ்சம் கூடுலாகவே வேலுமணிக்கு வாக்குகள் விழும் என்கிறார்கள்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications