போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன்
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூருக்கு பதிலாக, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதுகுறித்து கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கடுப்பாகி பதில் சொல்லியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அது ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தில் 5 வருடங்களாக மக்கள் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் தினசரி பல்வேறு கொடுமைகளை அனுபவித்து இருக்கின்றனர்.

செந்தில் பாலாஜி குறித்த கேள்வி
தமிழகத்தில் கிட்டத்தட்ட 9,000 பெண்கள் பாதிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மேலும் 3500க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் எந்த குடும்பமும் வாழ முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப் போய்விட்டது. அதை கட்டிக் காக்க முதலமைச்சர் தவறவிட்டுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி
தற்போது திமுக தலைவர் மீண்டும் அதே வேட்பாளர்களை அறிவித்துள்ளார். தமிழக மக்கள் அவர்களை விரட்டியடிப்பார்கள். செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டால் போட்டியிட்டு கொள்ளட்டும். திமுகவில் நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தாலும் அங்கு ஆட்சி செய்வது ஒரே முகம் தான். அந்த முகம் இந்த தேர்தலில் மாற்றப்பட வேண்டும்.
மிக விரைவில் வேட்பாளர் பட்டியல்
மக்களுக்கு தேவையான நன்மைகள் செய்வதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும். இந்தக் கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் மட்டுமே தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும். தமிழகத்தில் கஞ்சா இல்லாத, பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகம் வேண்டும் என்றால் புரட்சித்தலைவர் வழி் வந்தவரால் மட்டுமே அதை செய்ய முடியும். மிக விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்" என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications