அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தான் பிரச்சனையே – பெருமாள் மணி திடுக் தகவல்
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதிகள், தொகுபி பங்கீடு உள்ளிட்டவற்றால் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. அதிமுக பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்தக் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இது தமிழ்நாடு அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும், திமுகவின் திட்டம் என்ன என்பது குறித்து அரசியல் விமர்சகர் பெருமாள் மணி பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அரசியல் திறனாய்வாளர் பெருமாள் மணி ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த நேர்காணலில், "10 வருடங்கள் ஆட்சியில் இல்லாத ஸ்டாலின் கடுமையாக போராடித்தான் ஆட்சியை பிடித்தார். 2026 ஆண்டில் அவர்.அவ்வளவு போராட வேண்டியகில்லை, 2021.ஆண்டைவிட ஸ்டாலின் பல மடங்கு வலிமையாக இருக்கிறார். மற்ற கட்சிகள் விருப்பமனு வாங்க தொடங்கிவிட்டனர். திமுக நிதானமாக செல்ல கிட்டமிட்டுள்ளனர்.

விஜய் பிராண்ட் பெரிது
அந்தளவுக்கு அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணி, தவெக ஆகியோருக்கு பிறகு செய்து கொள்ளலாம் என்றுள்ளனர். ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து ஏதாவது ஓர் அணிக்குள் சென்றால் அது அந்த அணிக்கு அசுரபலம் கிடைக்கும், தொகுதி பங்கீடு எல்லாம் மேல்மட்டத்தில் நடக்கும் பேச்சுவார்த்தை களத்தில் அதிமுக, அமமுக, பாஜக தொண்டர்கள் அனைவரும் இந்த கூட்டணியால் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள்.
கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசியல் 2 முனை போட்டியை தான் அதிகம் கண்டுள்ளது. தமிழ்நாடு அரசியலில் இந்த முறை 2 முனை போட்டி இல்லை இது 4 முனை தேர்தல், பாஜக தமிழ்நாடு அரசியலில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள், திமுக அதிமுக விடம் நிரூபிக்கப்பட்ட வாக்கு வங்கி உள்ளது. அவர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் மூன்றாவது சக்தி தமிழ்நாட்டில் வரவேயில்லை. விஜய் பிராண்ட் பெரியது.
அதிமுக கூட்டணியில் சிக்கல்
ஈரோடு, மலேசியா கூட்டங்கள் அதை உணர்த்தி வருகிறது. 2006 ஆண்டில் விஜயகாந்த் இருந்ததை விட 1986ஆம் ஆண்டு காங்கிரஸ் இருந்ததை விட தற்போது விஜய் வலிமையாக உள்ளார். இப்போதும், காங்கிரஸ் தவெக கூட்டணி உருவாக வாய்ப்புள்ளது. இந்தியாவில் பலர் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளனர்.
அவர்களில் யாரும் என திரைத்துறை வாழ்க்கை முடிந்தது. இனி அரசியல் தான் என்று கூறியதில்லை. இது களத்தில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசியல் கட்சிகள் கூட்டணி வெளியில் சொல்லும் அளவிற்கெல்லாம் பிணைப்புடன் இருக்க மாட்டார்கள். எவ்வளவு கொடுக்காலும் பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சிகள் வரை எல்லோருக்கும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்யும். தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீட்டிலும் சிக்கல் இருக்கும். அரசியல் மாறிவிட்டது.
திமுகவில் இணைய வாய்ப்பு
இனி தனிப்பட்ட பகையை காரணம் காட்டி யாரும் எந்த கூட்டணியிலும் சேராமல் இருக்க மாட்டார்கள். ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைவதற்கு வாய்ப்புள்ளது. ஓபிஎஸ், ராமதாஸ் பாமக, தேமுதிக பிரேமலதா ஒரே கூட்டணியில் இணைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. இது சற்று அவர்களுக்கு சற்று முன்னேற்றம் என்றாலும் அவர்களின் செயல்பாட்டை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications
