ஹாஸ்டல் ஜன்னலில்.. துண்டால் தூக்கு போட்டு கொண்ட நேபாள மாணவர்.. கோவை வேளாண் பல்கலையில் பரபரப்பு!

கோவையில் நேபாள மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஹாஸ்டலில் நேபாள மாணவர் தற்கொலை.. கோவை வேளாண் பல்கலையில் பரபரப்பு!-வீடியோ

    கோவை: வேளாண் பல்கலை கழகத்தில் பயின்று வந்த நேபாள மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நேபாளத்தை சேர்ந்தவர் பிபோநாத் நியூபன். இவரது மகன் சந்தோஷ் நியூபானே. 26 வயதாகிறது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தவர் சந்தோஷ் நியூபானே. பல்கலைக்கழக ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார்.

    Nepal student commits suicide at Kovai Agricultural university

    இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஹாஸ்டல் அறையில் உள்ள ஜன்னலில் துண்டால், சந்தோஷ் நியூபானே தூக்கு போட்டு கொண்டார். அவரது அறையில் ரொம்ப நேரமாகவே லைட் எரிந்து கொண்டு இருந்ததை பார்த்த பக்கத்து ரூம் மாணவர், எட்டி பார்த்தார்.

    அப்போது, சந்தோஷ் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதை பார்த்த அலறி அடித்து கொண்டு ஓடி, ஹாஸ்டல் நிர்வாகத்திற்கு தகவல் சொன்னார்கள்.

    Nepal student commits suicide at Kovai Agricultural university

    இதையடுத்து, நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் விரைந்து வந்து மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் காதல் விவகாரத்தில் மாணவன் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    தனது ஊரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+