கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் புதிய ஹைடெக் சிறை! என்னென்ன வசதிகள் தெரியுமா? எத்தனை பேரை அடைக்கலாம்?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே ஒன்னிபாளையம் சாலையில் அதிநவீன புதிய மத்திய சிறைச் சாலை வளாகம் ஒன்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. புதிய சிறையில் கைதிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

கோவை காந்திபுரத்தில் மத்திய சிறைச் சாலை உள்ளது. இது இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே இயங்கி வருகிறது. அதாவது 1872 ஆம் ஆண்டு இந்த சிறைச்சாலை நிறுவப்பட்டது.

coimbatore periyanaickenpalayam prison

தமிழகத்திலேயே பழமையான சிறைகளில் கோவை மத்திய சிறையும் ஒன்று. இங்கு பல்வேறு block-கள் உள்ளன. பல்வேறு பிளாக்குகளில் தற்போது 200 பெண் கைதிகள் உள்பட 2500 பேர் உள்ளனர்.

இடநெருக்கடி

இங்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் புதிய ஒரு சிறை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதிலும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உயர்ந்த பாதுகாப்புடன், கைதிகளை அடைத்து வைக்க புதிய சிறைச்சாலை கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கட்டப்பட்டு வருகிறது.

328 கோடி செலவு

ஒன்னிப்பாளையம் அருகே ரூ 328 கோடி செலவில் மத்திய சிறைச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக கடந்த மாதம் 19ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

95 ஏக்கர்

இந்த புதிய வளாகம் 95 ஏக்கரில் மூன்று கட்டங்களாக கட்டப்படுகிறது. முதல் கட்டத்தில் மத்திய சிறை வளாகமும் ஆண்களுக்கான சிறையும் கட்டப்படுகிறது. ஆண்களின் சிறை மட்டுமே 17 ஏக்கரில் அமைகிறது. அடுத்த கட்டமாக பெண்கள் சிறை 4 ஏக்கரில் அமைகிறது.

111 சிறைத் துறை அலுவலர்கள்

மேலும் 111 சிறைத் துறை அலுவலர்களுக்கான தங்குமிடமும் 5 ஏக்கரில் அமைகிறது. நிர்வாக அலுவலகம், ரிமாண்ட் கைதிகளை அடைக்கும் அறை, குற்றவாளிகளுக்கான தனி பிளாக், கடுங்காவல் தண்டனை கைதிகளுக்கான பாதுகாப்பு அறை, சிறை மருத்துவமனை, கைதிகளுக்கு உணவு தயாரிக்க சமையல் கூடம், பாய்லர் அறை, உணவு பாதுகாப்பு அறை, தூக்கு மேடை, ஜெனரேட்டர் அறை, காவலர்களுக்கான அறைகள், வாகனங்களை நிறுத்துவதற்கான அறைகள் என பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன.

ஒரு சிறை கண்காணிப்பாளர்

இது மட்டுமல்லாமல் சிறை கண்காணிப்பாளர், இரு கூடுதல் கண்காணிப்பாளர்கள், 2 ஜெயிலர்கள், 6 உதவி ஜெயிலர்கள், 100 வார்டன்கள் பணியாற்ற 5 மாடிகளுடன் கூடிய கட்டடம் கட்டப்படுகிறது.

3 ஆயிரம் கைதிகள்

இந்த சிறையில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் கைதிகளை அடைத்து வைக்கலாம். முதல் கட்ட கட்டுமான பணிகள் முடிக்க ஒன்றரை ஆண்டுகள் ஆகும். இதற்கு 211 கோடி செலவிடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சிறைகள் உயர் பாதுகாப்பு வசதிகளுடன், அதிநவீன சிசிடிவி கேமராவுடன் அமைகிறது.

138 சிறைகள்

தமிழகத்தில் மொத்தம் 138 சிறைகள் உள்ளன. அவற்றில் 9 மத்திய சிறைகள், மாவட்ட சிறை, பார்ஸ்டல் பள்ளி, 3 பெண்கள் தனிச்சிறைகள், மாவட்ட சிறைகள், திறந்தவெளிச் சிறைகள், கிளைச் சிறைகள் உள்ளன.

புழல் மத்திய சிறை

புழல் மத்திய சிறை, வேலூர் மத்திய சிறை, மதுரை, திருச்சி, கடலூர், கோவை, சேலம், தஞ்சை, திருப்பூர் ஆகிய இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளைச் சிறைகளும், மாவட்ட சிறைகளும் உள்ளன.

3 திறந்தவெளிச் சிறைகள்

தமிழகத்தில் 3 திறந்தவெளிச் சிறைகள் உள்ளன. கைதிகளின் நன்னடத்தையை பொருத்து சாதாரண சிறையிலிருந்து மாற்றப்பட்டு சமூகத்தில் இணக்கமான வாழ்வை வாழ அவர்களுக்கு வழிகாட்டுகின்றன. திறந்த வெளி சிறைகள் என்பதால் இங்கிருந்து தப்பியோட முடியாது. போதை வஸ்துகளை பயன்படுத்த முடியாது. அப்படி செய்தால் அவர்கள் மீண்டும் சாதாரண சிறையிலேயே அடைக்கப்படுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+