கல்யாணம் ஆகி நாலே நாள்தான்.. 2 மாத கர்ப்பம்.. ஆடிப்போன மாப்பிள்ளை..விசாரிச்சு பார்த்தா அடேங்கப்பா!
கல்யாணம் ஆன 4 நாளில் மனைவி கர்ப்பமானதால் கணவன் அதிர்ச்சி அடைந்தார்
பொள்ளாச்சி: கல்யாணம் ஆகி 4 நாள்தான் ஆனது.. புதுமனைவி திடீரென வாந்தி எடுக்கவும் மாப்பிள்ளை துடித்துபோய்விட்டார்.. ஆனால், அவர் இப்போது 2 மாதம் கர்ப்பமாம்.. இதை கேட்டு மாப்பிள்ளைக்கு தலையே சுற்றிக் கொண்டு வந்தது!
பொள்ளாச்சி சேர்ந்த இளைஞருக்கு நீண்ட நாட்களாக பெண் அமையாமல், கடைசியில் ஒரு புரோக்கர் மூலம் மணப்பெண் அமைந்தார். அந்த பெண்ணுக்கு வயது 27 ஆகிறது.. வால்பாறை பகுதியை சேர்ந்தவர்.. ரொம்ப நாளாக திருமணம் ஆகாததால், பெண் கிடைத்த சந்தோஷத்தில் உடனே கல்யாணம் செய்ய முடிவு செய்தனர்.
மணப்பெண் குடும்பத்திற்கு 12 பவுன் நகை, ரூ.50 ரொக்கத்தையும் மாப்பிள்ளை வீட்டிலேயே தந்து கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய சொன்னார்கள்.. ஒரு கோவிலில் 4 நாளைக்கு முன்பு கல்யாணமும் சிறப்பாக நடந்தது.. அந்த பகுதி மக்கள் உட்பட உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் திரண்டு வந்து வாழ்த்தி விட்டு போனார்கள்.

மாப்பிள்ளை
புது மண தம்பதிகள் ஹனிமூனுக்கு ஊட்டி போய்விட்டு வீடு திரும்பினர்.. அன்று கல்யாணம் ஆகி 4-வது நாள்.. புதுமனைவி வாந்தி எடுத்தார். உடனே மாப்பிள்ளை சாப்பிட்டது ஏதோ சேரவில்லை.. ஃபுட் பாய்சன் என்று நினைத்து பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரிக்கு மனைவியை அழைத்து சென்றார்.

தலை சுற்றியது
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், புதுபெண் 2 மாதம் கர்ப்பம் என்று சொன்னார். மாப்பிள்ளைக்கு தலையெல்லாம் சுற்ற ஆரம்பித்தது.. 4 நாளில் 2 மாத கர்ப்பமா என்று உறைந்து நின்றார்.. மனைவியிடம் இதை பற்றி கேட்டதற்கு, அவர் வாயே திறக்கவில்லை.

கவலை
இதனால் அதிர்ச்சியும், கவலையும் அடைந்த மாப்பிள்ளை, பெண் கிடைத்த அவசரத்தில், யார், என்ன என்றுகூட விசாரிக்கவில்லையே என மனம் நொந்துபோனார்.. பின்னர்தான், பெண் வீட்டு பகுதியில் விசாரித்து பார்த்தார்.. அப்போது, அந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒருவருடன் கல்யாணம் ஆனதாம்.. அதை மறைத்து 2-வதாக கல்யாணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதை கேட்டு இன்னும் ஆடிப்போன மாப்பிள்ளை, பொள்ளாச்சி மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.

மிரட்டல்
அதில், "அந்த பெண் கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை.. ஆனால் கருவை கலைக்க என்னிடம் பெண்ணின் குடும்பத்தினர் கையெழுத்து கேட்டு மிரட்டுகிறார்கள்" என்று புகாரில் சொன்னார். இதையடுத்து, விசாரணைக்கு போலீசார் பெண் வீட்டினரை அழைத்தனர்.. ஆனால் அவர்கள் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இப்போது பெண்ணின் குடும்பத்தை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. இதேபோல, இந்த கல்யாணத்துக்கு பெண் பார்த்து தந்தாரே, அந்த புரோக்கரை மாப்பிள்ளை தேடி கொண்டிருக்கிறாராம்!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications