ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர மாணவர்களுக்கு மூளைச் சலவை.. 4 பேரிடம் என்ஐஏ தீவிர விசாரணை
கோவை: மாணவர்களை மூளைச் சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கோவை அரபிக் கல்லூரி முதல்வர், ஊழியர் என போலீஸார் 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், உக்கடத்தில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில், அந்த காரை ஓட்டி வந்த 28 வயதான ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் காரில் பால்ரஸ் குண்டு, ஆணி ஆகியவை இருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், ஜமேஷா முபின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள், குறியீடுகள், கிலோ கணக்கில் வெடிபொருள்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து அதனைப் பறிமுதல் செய்தனர்.
ஜமேஷா முபின் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இருந்ததும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு வைக்கும் வகையில் மிகப்பெரிய தாக்குதல் திட்டத்துக்கு தயாராகி வந்தது தெரியவந்தது.
இவ்வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் மொத்தம் 17 பேரை கைது செய்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்தனர். கடந்த ஆண்டு சென்னை அரபி கல்லூரி நிறுவனர் ஜமீல் பாட்ஷா, இர்ஷாத் செய்யது, அப்துர் ரகுமான், முகமது உசேன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக நேற்று முன்தினம் விசாரணை மேற்கொள்ள என்ஐஏ அதிகாரிகள் கோவைக்கு வந்தனர். கோவை போத்தனூர் திருமறை நகரைச் சேர்ந்த அரபிக் கல்லூரி முதல்வரான அகமது அலி, அரபிக் கல்லூரி ஊழியரான உக்கடம் புல்லுக்காட்டை சேர்ந்த ஜவஹர் சாதிக், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராஜா முகமது மற்றும் சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த சேக் தாவூத் ஆகிய 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் சென்னை அரபி கல்லூரி நிறுவனரான ஜமீல் பாட்ஷாவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
கைதான 4 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதற்காக இளைஞர்கள் மற்றும் மாணவர்களை மூளைச்சலவை செய்ததாகவும், அது குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications