அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. கோவை மக்களே உஷார்.. களத்தில் இறங்கிய சுகாதாரத் துறையினர்
கோவை: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக - கேரள எல்லையான கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பெருந்தொற்று பரவல் ஓய்ந்துள்ள நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று பரவி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனைப் பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் பொது சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கேரள எல்லையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சுகாதாரக் குழுக்களை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், உறவினர்கள், சுற்றுப்புறங்களில் ஆய்வு செய்தல், தனிமைப்படுத்துதல், காய்ச்சல் சந்தேக நபர்களை தனிமைப்படுத்துதல், ஆய்வகப் பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கூட்டு நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நிபா வைரஸால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக 175 பேர் கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில், 74 பேர் சுகாதாரத் துறைப் பணியாளர்கள் என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, கோவை - கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாளையார், வேலாந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், வீரப்பகவுண்டனூர், நடுப்புனி, ஜமீன்காலியாபுரம், வடக்காடு, செம்மனாம்பதி உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளத்தில் இருந்து கோவைக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்று கேட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். காய்ச்சல் அறிகுறி இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் தான் கோவை மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, கோவை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி அருணா கூறுகையில், கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் 24 மணி நேரமும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. நிபா வைரஸ் அறிகுறியுடன் வரும் நோயாளிகள் குறித்த விவரங்களை தெரிவிக்க அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இதுவரை தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் பதிவாகவில்லை. இருப்பினும், பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக் கவசம் அணிவதன் மூலம் அனைத்து விதமான தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications